- Advertisement -
Homeபொழுதுபோக்குமூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்குள் நிறைவு… ஆனா படம் ரிலீஸ் ஆகப்போவது...

மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்குள் நிறைவு… ஆனா படம் ரிலீஸ் ஆகப்போவது எப்போ தெரியுமா? – அடப் போங்கப்பா என முகம்சுளித்த ரசிகர்கள்!

- Advertisement -

இன்றைய தமிழ் சினிமாவில் வெற்றிக்கு கியாரண்டி ஆன ஒரு இயக்குனர் என்றால் அது சுந்தர் சி என்பது அனைவருக்குமே தெரியும். அவரை பொருத்த வரை ஒரு படத்தை வெற்றிப் படமாக எடுத்து தயாரிப்பாளருக்கு கணிசமான லாபத்தை தரும் சூட்சுமம் அறிந்தவர். வித்யாசமான படம் எடுக்கிறேன் என்று தயாரிப்பாளர் தலையில் துண்டு போட வைக்காத இயக்குனர் என்பதாலேயே அவர் தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குனராக கொண்டாடப்படுகிறார்.

காதல் காமெடி கவர்ச்சி ஃபேமிலி சென்டிமென்ட் என்ற விஷயங்களை மையப்படுத்தி அந்த ஜானரில்தான் பெரும்பாலும் சுந்தர் சி படங்களை உருவாக்குகிறார். இதற்கிடையே அரண்மனை சீரிஸ் மூலம் திகில் திரில் படங்களை தந்தும் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். ஒரு ஹீரோ எப்படி இருந்தால் அந்த படம் ரசிக்கப்படுமோ அப்படி ஒரு படத்தை தருவதில் சுந்தர் சி கில்லாடியாக உள்ளார்.

- Advertisement -

இப்போது இயக்குனர் சுந்தர் சி நடிகை நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ரா இனியா யோகிபாபு துனியா விஜய் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். ஹிப் ஆப் ஆதி இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை ரூ. 120 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.

முதன்முறையாக சுந்தர் சி – நயன்தாரா காம்போவில் உருவாகும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் துவங்கிய நிலையில் இந்த அக்டோபர் மாதத்துடன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நவம்பரில் விஷால் நடிக்கும் படத்தை சுந்தர் சி இயக்க கமிட் ஆகியுள்ளார்.

- Advertisement -

அதே நேரத்தில் மூக்குத்தி அம்மன் 2 படம் அடுத்த 2026ம் ஆண்டில் ஆகஸ்ட் 15ம் தேதி அல்லது அதன்பிறகு வரும் ஆயுத பூஜை பண்டிகை காலத்தில்தான் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. அதாவது ஏறக்குறைய அந்த படம் வெளியாக ஓராண்டு காலம் ரசிகர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது ரசிகர்களை அப்செட் செய்துள்ளது. ஆனால் எதற்கு இவ்வளவு காலம் இடைவெளி என்பதற்கான பதிலும் தற்போது கிடைத்துள்ளது.

அதாவது மூக்குத்தி அம்மன் 2 முழுக்க முழுக்க கடவுள் பக்தியை மையப்படுத்திய ஒரு படம். அதில் பல மாயாஜால காட்சிகளும் மந்திர தந்திர காட்சிகளும் வருகின்றன. அதனால் இந்த படத்தில் சிஜி விஎப்எக்ஸ் போன்ற தொழில்நுட்ப பணிகள் அதிகமாக உள்ளன. அதற்காக 6 மாதம் வரை கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் வருகிற 2026 ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அல்லது மேலும் சிஜி தொழில்நுட்ப பணி நீடித்தால் ஆயுதபூஜை ரிலீஸ் என இயக்குனர் சுந்தர் சி திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

- Advertisement -

சற்று முன்