தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிக்கரமான இயக்குனர் என பெயர் பெற்றவர் சுந்தர் சி. இவரது படங்கள் நிச்சயமாக தோல்வி அடையாது. தயாரிப்பாளருக்கு அதிக நஷ்டமும் தராது. ஏனெனில் ரசிகர்களின் நாடி பிடித்து பார்த்து அவர்கள் ரசிக்கும் படியான படங்களை தந்து ஜெயித்துக்கொண்டிருப்பவர் சுந்தர் சி. காதல் காமெடி கிளாமர் சென்டிமென்ட் படங்கள்தான் இவரது ஜானராக இருக்கின்றன.
சமீபத்தில் சுந்தா் சி இயக்கத்தில் வெளியான மதகஜ ராஜா படம் பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படம் கடந்த 2012ம் ஆண்டில் எடுக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு தாமதமாக வௌியான மதகஜ ராஜா படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரி குவித்தது. காதல் காமெடி கிளாமர் ஆக்சன் என பெரிய வெற்றியை இந்த படம் தந்தது.
வழக்கமான ஜானரில் மட்டுமின்றி அவ்வப்போது திகில் திரில்லர் படங்களையும் எடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் சுந்தர் சி. அரண்மனை அரண்மனை 2 அரண்மனை 3 அரண்மனை 4 படங்களை தொடர்ந்து மிக விரைவில் அரண்மனை 5 படத்தை எடுக்கவும் சுந்தர் சி திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்பாக இப்போது நயன்தாரா அம்மனாக நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார்.
சுந்தா் சியை பொருத்த வரை நட்சத்திரங்களை நம்பாமல் கதையை நம்பி படம் எடுப்பவர். அதனால் ஒரு நடிகர் ஒரு நடிகை தன் படத்தில் ஏதேனும் கால்ஷீட் குளறுபடி செய்தாலே தேவையின்றி பிரச்னைகள் செய்தாலே உடனடியாக அவர்களை நீக்கி விட்டு வேறு ஒரு நடிகரை நடிகையை நடிக்க வைத்து படத்தை முடித்து விடுவார். அந்த படமும் ஜெயித்து விடும். அதுதான் அவரது பாணியாக உள்ளது.
ஆனால் இப்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் அம்மனாக முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நயன்தாரா, அடிக்கடி சுந்தர் சியை அப்செட் செய்து வருகிறார். மொத்தமாக ஒரு மாதம் கால்ஷீட் தந்த அவர் இப்போது சென்னை ஈசிஆரில் நடந்து வரும் மூக்குத்தி அம்மன் 2 ஷூட்டிங்கில் 10 நாட்கள் தொடர்ந்து நடிக்க நயன்தாராவை சுந்தா் சி அழைத்திருக்கிறார். ஆனால் 3 நாட்கள் மட்டுமே வர முடியும் என்று நயன்தாரா கறாராக கூறி சுந்தர் சியின் கடுப்பேற்றி இருக்கிறார்.
மேலும் இந்த 3 நாட்களுக்கு பிறகு, நான் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள சென்று விடுவேன். அதில் முழுமையாக நடித்து முடித்துவிட்டுதான் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க வருவேன் என்றும் கட் அண்ட் ரைட்டாக கூறியிருக்கிறார். ஈசிஆரில் 10 நாட்கள் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அடுத்த ஷெட்யூலை பொள்ளாச்சிக்கு திட்டமிட்ட இயக்குனர் சுந்தர் சி, நயன்தாரா சொன்ன பதிலால் விரக்தியின் உச்சத்துக்கே போய் அப்செட்டில் இருக்கிறார். சிரஞ்சீவி படத்தை முடித்து விட்டு நயன்தாரா திரும்பி வந்து எப்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை முடிப்பது என்ற டென்சனில் சுந்தா் சி இருந்துவருகிறார்.





