ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ் சினிமாவில் காதலர் தினத்தை மையப்படுத்திய பல காதல் படங்கள் வெளியாகி இருக்கின்றன. காதலர் தினம் பிப்ரவரி 14 போன்ற டைட்டில்களிலும் தமிழ் சினிமாவில் படங்கள் வந்துள்ளன.
இந்நிலையில் இன்னும் 4 நாட்களில் காதலர் தினம் பிப்ரவரி 14 வருகிறது. இதையொட்டி காதலர் தினத்தில் புதிய படங்கள் ரிலீஸாக உள்ளன. பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் மற்றும் தனுஷ் டைரக்ட் செய்த நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் பிப்ரவரி 14ம் தேதிதான் ரிலீஸ் செய்யப்பட இருந்தன.
ஆனால் பிப்ரவரி 6ம் தேதி நடிகர் அஜீத்குமார் திரிஷா நடித்த விடாமுயற்சி படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால், டிராகன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்கள் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டன. இந்த படங்கள் வருகிற 21ம் தேதி ரிலீஸ் ஆகின்றன. நாளை நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் டிரெய்லர் வெளியாகிறது.
வரும் 14ம் தேதி காதலர் தினத்தில் இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் 2கே லவ் ஸ்டோரி என்ற படம் ரிலீஸாகிறது. இந்த படத்துக்கு டி இமான் இசையமைத்துள்ளார். அடுத்து நடிகர் சத்யராஜ் ஜெய் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த பேபி அண்ட் பேபி என்ற படம் வருகிற 14ம் தேதியன்று ரிலீஸாக உள்ளது. இது குழந்தை மாறாட்டம் குழந்தை கடத்தலை மையப்படுத்திய கதையாகும்.
இயக்குனர் நந்தா இயக்கத்தில் வெளியான படம் படவா. 6 ஆண்டுகளுக்கு முன் உருவான இந்த படம் இப்போது வருகிற 14ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் விமல் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் சூரி காமெடி ரோலில் நடித்திருக்கிறார்.
சீரியல் நடிகை ரக்சிதா மகாலட்சுமி கிளாமர் ரோலில் நடித்த படம் பயர். விஜய் டிவி சீரியல்களில் குடும்ப குத்துவிளக்கு போன்று நடித்துள்ள நடிகை ரக்சிதா இந்த படத்தில் சில்க் ஸ்மிதாவை மிஞ்சும் அளவுக்கு கிளாமர் ரோலில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படமும் வருகிற 14ம் தேதி ரிலீஸாகிறது. பிப்ரவரி 14 அன்று தமிழில் 4 படங்கள் வெளியாகின்றன.





