- Advertisement -
திமுக மாநில துணை பொதுச் செயலார் தூத்துக்குடி எம்பி கனிமொழி கூறியிருப்பதாவது, சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து பெண் வெட்டி சாய்க்கப்பட்டு அவரது 2 பெண் குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளது. குலசேகரப்பட்டணம் தசரா திருவிழாவில் இளைஞர்களை தாக்கி பலியாகி உள்ளனர். வேளாங்கண்ணியில் இரண்டு சிறுமிகள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை என்று குற்றங்கள் தொடர்கிறது. தமிழ்நாட்டுப் பெண்களுக்கு நாங்கள் தான் பாதுகாவலர்கள் என்று வீர வசனம் பேசுபவர்களின் அவல ஆட்சிக்கு அன்றாடம் பெண்களுக்கு எதிரான குற்றங்களே சாட்சி என்று கனிமொழி எம்பி கூறியிருக்கிறார்.





