தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்களில் அதிகம் பேசப்படுபவர் நடிகர் தனுஷ். அவர் தொடர்ந்து தனது திரைப்பட பணிகளில் கவனம் செலுத்தி கொண்டு இருந்தாலும், அவரைப் பற்றிய வதந்தி சுற்றிக் கொண்டே இருக்கும். இதற்கு தனது திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் பதிலடி கொடுத்துவிடுவார் தனுஷ்.
அண்மையில் தனுசுக்கும் நயன்தாராக்கும் இடையே நடந்த மோதல் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியது. தனது திருமணம் தொடர்பான ஆவணப்படத்திற்கு, நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்த தயாரிப்பாளரான தனுஷ் மறுப்பதாகவும், என் ஓ சி சான்றிதழ் அளிப்பதற்கு அவர் பணம் கேட்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தார் நயன்தாரா.
அது மட்டுமல்ல, அவரின் குணாதிசயத்தையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். ரசிகர்களை ஏமாற்றுகிறார் என்றும் கூறியிருந்தார். இந்த விஷயம் மிகப்பெரிய பேசு பொருளான நிலையில், அதனை துளியும் கண்டுகொள்ளாத தனுஷ், ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவதாக தனுஷ் அறிவித்தார். இருவரும் பரஸ்பரம் தங்கள் உறவை முறித்துக் கொண்டதாக இணையத்தில் பதிவிட்டனர். இது ஒட்டுமொத்த தமிழ் திரை உலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இப்படியான சூழலில் தனுஷ், வேறு ஒரு நடிகையுடன் உறவில் இருப்பதாக அவ்வபோது தகவல் கசிந்து வந்தது. இப்படியான சூழலில், நடிகை மிருணாள் தாக்கூர், நடிகர் தனுஷ் இருவரும் காதலிப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்தி திரையுலகில் சன் ஆப் சர்தார் 2 திரைப்படத்தின் விழாவில் மிருணாள் தாக்கூருடன் தனுஷ் பங்கேற்றதால், அங்குள்ள சேனல்கள் இதை பெரிது படுத்தின.
இப்படியான சூழலில் இந்த விஷயம் குறித்து முதன் முதலாக பதிவிட்டு இருக்கிறார் நடிகை மிருணாள் தாக்கூர். அதில், நானும் தனுஷும் நண்பர்கள். அதைத் தவிர எங்களுக்குள் வேறு எந்த ஒரு தொடர்பும் கிடையாது. அஜய் தேவ்கன் அழைத்து பேசியதின் பேரில்தான், சன் ஆப் சர்தார் 2 படத்தின் நிகழ்ச்சியில் தனுஷ் பங்கேற்றார். என்னையும் தனுசையும் இணைத்து பேசுவதை பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.





