- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்களோட கேரக்டர் எனக்கு சுத்தமா பிடிக்கல. எல்.ஜி.எம் படத்தின் நடிகையை விமர்சித்த தோனி - எதற்கு...

உங்களோட கேரக்டர் எனக்கு சுத்தமா பிடிக்கல. எல்.ஜி.எம் படத்தின் நடிகையை விமர்சித்த தோனி – எதற்கு தெரியுமா?

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனிக்கு தமிழகத்தில் உள்ள ரசிகர்களின் ஆதரவினை பற்றி சொல்லி தெரிய தேவையில்லை. கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் இவர் சென்னை தனது இரண்டாவது தாய் வீடு என்று கூறும் அளவிற்கு தமிழ்நாட்டின் மீது பற்றுடன் இருந்து வருகிறார். அதோடு உலகெங்கிலும் இருக்கும் ரசிகர்களை காட்டிலும் தோனிக்கு தமிழகத்தில் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இதன் காரணமாகவே தமது தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக தமிழ் படத்தை தயாரிக்க விரும்பியதாகவும் தோனி அண்மையில் நடைபெற்ற எல்.ஜி.எம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்து இருந்தார்.

Dhoni-LGM

அதன்படி தோனி தயாரித்துள்ள முதல் தமிழ் திரைப்படமான lgm என்கிற படத்தினை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர்.ஜே விஜய், தீபா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். வரும் ஜூலை 28-ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த எல்.ஜி.எம் திரைப்படத்திற்கான ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் வேளையில் தற்போது இந்து படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் இந்த எல்.ஜி.எம் திரைப்படத்தினை பார்த்த தோனி என்ன சொன்னார்? என்பது குறித்து படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட ஒரு பிரத்தியேக பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஹரிஷ் கல்யாண் கூறுகையில் : இந்த படத்தினை பார்த்தபோது தோனி இவானாவின் கேரக்டர் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார். ஏனெனில் அம்மா மீது அதிக அன்பு உடையவராக இருக்கும் தோனி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் இவானா கதாநாயகனான ஹரிஷ் கல்யாண் மற்றும் அவரது அம்மாவான நதியாவையும் பிரிக்க நினைப்பதனால் அவரது கேரக்டர் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறினாராம்.

Ivana-and-Dhoni

அதன் பின்னர் இது ஒரு திரைப்படம் தான் என்பதை உணர்ந்த தோனி இவானாவின் படத்தில் இருந்த கேரக்ட்டர் தான் எனக்கு பிடிக்கவில்லையே தவிர அவரை பிடிக்காமல் இல்லை உங்களது நடிப்பு பிரமாதமாக இருந்தது என்று பாராட்டியிருந்தாராம் இந்த படத்தின் ஹீரோவான ஹரிஷ் கல்யாண் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். இந்த எல்.ஜி.எம் திரைப்படத்தின் கதைப்படி ஹரிஷ் கல்யாண் இவானாவை காதலிக்கிறார். அந்த காதலை ஒப்புக்கொள்ளும் இவானா நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனில் தனி குடுத்தனும் செல்ல வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் அதற்கு ஹரிஷ் கல்யாண் நான் என் அம்மாவை விட்டு தனியே வரமாட்டேன் என்று கூறுகிறார்.

- Advertisement -

பின்னர் காதலியான இவானா கொடுக்கும் ஒரு ஐடியா படி குடும்பமாக அனைவரும் ஒரு ட்ரிப்புக்கு செல்கிறார்கள். அந்த ட்ரிப்பில் தனியாக மாட்டிக் கொள்ளும் இவானா மற்றும் நதியா ஆகியோர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்களா? அதன் பின்னர் அங்கிருந்து மீண்டு வந்து ஒரே குடும்பமாக சேர்ந்தார்களா? என்பதை அடிப்படையாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ள வேளையில் நிச்சயம் தோனி தயாரித்துள்ள இந்த படமானது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றியை தரும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்