- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த கேரக்டரில் நடிக்கப் போறது நயன்தாராவா? திரிஷாவா? நொந்து போன ரசிகர்கள் - பாரத...

அந்த கேரக்டரில் நடிக்கப் போறது நயன்தாராவா? திரிஷாவா? நொந்து போன ரசிகர்கள் – பாரத ரத்னா விருது பெற்ற பாடகிக்கு இப்படி ஒரு சோதனையா?

- Advertisement -

நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டாலும் சமீபகாலமாக அவரது சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கவில்லை. அதனால் நயன்தாராவே தனது எதிர்காலம் கருதி அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை பிஸினஸில் இறங்கி விட்டார். தொடர்ந்து தனது கணவருடன் படங்கள் தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

நயன்தாரா, இப்போது கிளாமர் ரோல்களில் நடிக்காவிட்டாலும் ஆரம்பத்தில் பல படங்களில் எல்லை தாண்டிய கவர்ச்சியில் நடித்தவர். குறிப்பாக வல்லவன், பில்லா, வில்லு போன்ற படங்களில் அவரது கவர்ச்சி, எல்லை தாண்டி ஆபாசமாக இருந்தது. பில்லா படத்தில் கருப்பு நிற டூ பீஸ் உடையில் திரையில் தோன்றி ரசிகர்களை வாய்பிளக்க வைத்தவர் நயன்தாரா. அதே போல் சிம்பு, பிரபுதேவா போன்றவர்களுடன் காதல், டேட்டிங் என வாழ்ந்தவர் நயன்தாரா.

- Advertisement -

அதே போல் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் திரிஷாவும் கவர்ச்சியில் பல எல்லைகளை கடந்தவர். சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் திரிஷா மீது பல விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக குடிபோதையில் நள்ளிரவில் ஆட்டம், பல காதலர்கள் சகவாசம் என பல சர்ச்சைகளில் சிக்கியவர். சமீபத்தில் கூவத்தூர் நட்சத்திர விடுதி சர்ச்சையிலும் திரிஷா சிக்கியது குறிப்பிடத்தக்கது.

சினிமாவிலும், நிஜ வாழ்விலும் நயன்தாரா, திரிஷா இருவருமே ஒருவருக்கு ஒருவர் சலித்தவரில்லை என்று சொல்லும் அளவுக்கு கடுமையான விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் ஆளானவர்கள். குறிப்பாக ஒழுக்கமில்லாத விஷயங்களில் இருவருமே அதிக ஆர்வம் கொண்டவர்கள். அதனால் இவர்களை கவர்ச்சி நாயகிகளாக பார்க்கலாமே, தவிர காவிய நாயகிகளாக பார்ப்பது சற்று கஷ்டம்தான்.

- Advertisement -

இப்போது ஜீனியஸ்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடக இசைப்பாடகி எம்எஸ் சுப்புலட்சுமி, இசைத்துறையில் பாரத ரத்னா விருது பெற்றவர் இவர் மட்டும்தான். 10 வயதில் இருந்து பாடியவர். சில படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது வாழ்க்கை வரலாறு படம் விரைவில் எடுக்கப்பட உள்ளது.

இதில் எம்எஸ் சுப்புலட்சுமியாக நயன்தாரா, திரிஷா இருவரில் யாரை நடிக்க வைப்பது என பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. எம்எஸ் சுப்புலட்சுமி இசை சரஸ்வதியாக போற்றப்படுபவர். குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா போன்ற தெய்வீக பாடல்களை பாடியவர். அவரது கேரக்டரில் குத்தாட்டம் போட்ட கவர்ச்சி நாயகிகள் நயன்தா அல்லது திரிஷா நடிப்பதா, என்ன கொடுமை சார் இது என தமிழ் சினிமா ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்