- Advertisement -
கடந்த 1990களில் தமிழ் சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் நடனப்புயல் என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் பிரபுதேவா. இப்போது நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள கலகலப்பான காமெடி திரைப்படம் மூன்வாக். இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு இசையமைத்தது மட்டுமின்றி ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏஆர் ரகுமான் ஒரு சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் ஆக அமைந்துள்ளது.





