தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவர் தமிழக முதல்வர் விஜய் குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவர் அரசியல் கட்சி துவங்கிய நிலையில் மாநாடு கூட்டங்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போதே பலவிதமான எதிர்மறை விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்தன.
குறிப்பாக பனையூர் பண்ணையார் பனையூரை விட்டு வெளியே வர மாட்டார். கரூர் சம்பவத்த்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் சொன்னது, தனி விமானத்தில் மற்ற நகரங்களுக்கு செல்வது, எழுதி தரப்பட்ட ஸ்கிரிப்ட்டை படிப்பது என பலவிதமான விமர்சனங்கள் அவர் மீது இருந்தன.
இப்போது தமிழக முதல்வரான பிறகும் விஜய் மீது கடும் விமர்சனங்கள் தொடர்கின்றன. தீய சக்தி தீய சக்தி என்று திமுகவை வசைபாடிய விஜய், முதல்வராக வேண்டி அந்த திமுக கூட்டணி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது, அவர்களுக்கு அமைச்சர் பதவி தந்தது மிகப்பெரிய ஊழல் இல்லையா என்று பலரும் விமர்சிக்கின்றனர்.
திமுக தயவில்தானே விஜய் முதல்வராகி இருக்கிறார் என்பதுதானே உண்மை? திருச்சியில் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் திமுகவை வழக்கம் போல வசைபாடிய விஜய் சட்டசபையில் மட்டும் வாயே திறக்காமல் அமைதி காப்பது ஏன்? ஸ்கிரிப்ட் எழுதி தந்தால் மட்டும்தான் வாய் திறந்து பேசுவாரா என்றும் விமர்சனம் பரவலாக எழுந்துள்ளது.
முதல்வர் விஜய் வசம் உள்ள துறைகள் சார்ந்த எதிர்கட்சி எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு விஜய்க்கு பதிலாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனாவும் ராஜ்மோகனும் பதில் சொல்வதும் விஜய் அதை வேடிக்கை பார்ப்பதும் தவெக தொண்டர்களுக்கே கடும் விரக்தியை ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்த சூழலில் நடிகர் விஜய், தேர்தல் நேரத்தில் நான் வராத ஊர்களுக்கு எல்லாம் முதல்வரான பிறகு வருவேன் என்றும் உறுதிமொழி தந்திருந்தார்.
இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், முதல்வராக ஆனதும் உங்கள் ஊர்களுக்கு வந்து உங்கள் பிரச்னைகளை குறைகளை எல்லாம் நேரில் மக்களிடம் கேட்பேன் என்ற மேடையில் வாக்குறுதி தந்தாரே? கிளம்பி விட்டாரா? பொய்தானே? அதிகார வெறியுடன் வந்தார். அதை அடைந்து விட்டார் என்று ஜேம்ஸ் வசந்தன் ஆவேசமாக பேசியிருக்கிறார்.





