- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி கமல் இருவரும்தான் தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தை திறக்கணும் - தமிழ் சினிமா...

ரஜினி கமல் இருவரும்தான் தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தை திறக்கணும் – தமிழ் சினிமா ரசிகர்களிடம் வலுக்கும் கோரிக்கை!

- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா மிக விரைவில் நடைபெற உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக சங்க கட்டிடம் பழமையான நிலையில் அவை முற்றிலும் இடித்து அகற்றப்பட்டு பிரமாண்டமாக புதிய கட்டிடம் கட்டுமான பணி கடந்த பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இப்போது கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் திறப்பு விழா செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் பேசுகையில், 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்க போகிற புதிய நடிகர் சங்க கட்டிடத்தை இன்றைய தமிழக முதல்வர் விஜய் திறக்க உள்ளார் என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது என்று ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தமிழ்நாட்டின் முதல்வராக உள்ளார். அரசியல் ஆசையில் முதல்வராகும் ஆர்வத்தில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு சினிமாவை புறக்கணித்து விட்டு சென்றவர்தான் விஜய். அவர் நடித்த 69 படங்களில் சிறந்த இயக்குனர்களால் நல்ல கதைகளால் வெற்றிப் பெற்ற படங்கள்தான் அதிகமே தவிர, அவரது நடிப்புக்காக ஓடிய படங்கள் என்று எதுவுமே இல்லை.

ஆனால் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் தமிழ் சினிமாவுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர்கள். அதிலும் நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவுக்காக தன்னால் முடிந்த அளவு எத்தனையோ சாதனைகளை அவர் செய்திருக்கிறார். தமிழ் சினிமாவை தொழில்நுட்ப ரீதியாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு சென்ற பெருமைக்கு சொந்தக்காரர் அவர்தான்.

- Advertisement -

தமிழ் சினிமாவை பொருத்த வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசனை விட விஜய் பெரிய சாதனையாளர் அல்ல என்பது யாருமே மறுக்க முடியாத உண்மை. கமல் அடுத்து தனது 237வது படத்தில் நடிக்க இருக்கிறார். ரஜினிகாந்த் இப்போது தனது 173வது படத்தில் நடித்து வருகிறார். இருவருமே 50 ஆண்டுகளை கடந்த மூத்த கலைஞர்களாகவும் தமிழ் சினிமாவில் உள்ளனர்.

அதனால் தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தை திறப்பு விழா செய்ய மிகவும் தகுதியான அடையாளங்களாக இருப்பது ரஜினியும் கமலும் மட்டும்தான். தமிழக முதல்வர் என்கிற ஒரு அடையாளத்துக்காக விஜயை திறந்து வைக்க சொல்வது சரியாக இருக்காது. இதை விஜயே புரிந்துக்கொண்டு ரஜினி கமல் இருவரும் கட்டிடத்தை திறந்து வைக்க அழைக்க வேண்டும். இதனால் அந்த புதிய சங்க கட்டடத்துக்கு தான் தமிழ் சினிமாவின் சிகரங்கள் ரஜினி – கமல் இருவரும் இணைந்து திறந்து வைத்த சங்க கட்டடம் என்கிற ஒரு பெருமை காலம் முழுவதும் கிடைக்கும் என்று ரசிகர்கள் கூறி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்