- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்போவே அரசியல் பாட்டு... விஜய் கிட்ட அந்த வெறி இருந்தது... ஐடியா எஸ்ஏசி கொடுத்தது.. ரகசியம்...

அப்போவே அரசியல் பாட்டு… விஜய் கிட்ட அந்த வெறி இருந்தது… ஐடியா எஸ்ஏசி கொடுத்தது.. ரகசியம் பகிர்ந்த பரணி

- Advertisement -

கோலிவுட்டின் டாப் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் விஜய். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானபோது அவரது உருவத்தை வைத்து ஒரு பத்திரிகை கேலி செய்து ஓபனாகவே எழுதியது. ஆனால் மனம் தளராத விஜய்யோ திறமையை வளர்த்துக்கொண்டு இப்போது அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் நின்றுகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்திவந்த விஜய் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்த பிறகு தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். அதன் மூலம் பொதுமக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறார். சமீபத்தில்கூட அனைத்து தொகுதிகளிலும் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கினார்.

அதேபோல் உலக பட்டினி தினத்தில் உணவு அளித்தது, அனைத்து மாவட்டங்களிலுமே இரவு நேர பாடசாலையை திறந்தது என அவரது நடவடிக்கை பாராட்டை பெற்றுவருகிறது. அதேசமயம் விஜய் அரசியலுக்கு வருகிறார். அதன் காரணமாகத்தான் இதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறார் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது. ஆனால் அரசியல் எண்ட்ரி குறித்து விஜய் இதுவரை வாய் எதுவும் திறக்காமல் மௌனம் சாதித்துவருகிறார்.

இதற்கிடையே விஜய் அரசியலுக்கு வருவதற்கான விதையை எப்போதோ போட ஆரம்பித்துவிட்டார். எம்ஜிஆர், ரஜினிகாந்த் போல் தனது பாடல் வரிகளில் பொதுக்கருத்துக்களையும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது என்னமோ அவர் வளர்ந்த பிறகுதான் வந்தது என பலரும் நினைக்கலாம். ஆனால் தனது முதல் படமான நாளைய தீர்ப்பிலிருந்தே இது தொடங்கியிருக்கிறது.

நாளைய தீர்ப்பு படத்தில் இசையமைப்பாளர் பரணி மாப்பிள்ளை நான் சொல்லுறத கேளு என்ற பாடலை எழுதியிருந்தார். அதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியபோது, “படத்துக்கு மணிமேகலை இசையமைத்திருந்தார். அவர் ட்யூன் சொல்ல சொல்ல காந்தி பிறந்ததும் நேரு பிறந்ததும் பேரும் புகழும் பெற்று மேலே உயர்ந்ததும் நெஞ்சில் இருக்குது சொல்ல துடிக்குது நீ கேளு;மண்ணில் விழுந்ததும் கொள்கை இருக்கணும்; வாழ்ந்து முடிச்சதும் பேரு நிலைக்கணும் இந்த நினைப்பு அது என்றும் இருக்கணும் நெஞ்சோடு.

கல்விக்கண் திறந்த காமராஜர் போல தமிழின் நிலை காக்கும் கலைஞர் போல வாரி கொடுப்பதில் வள்ளல் எம்ஜிஆர் போல புரட்சி பல செய்யும் செல்வி போல ஊர் எங்கும் பேர் வாங்க அவர் போல நாம உழைக்கணும்” என எழுதினேன். இதை கேட்ட பலரும்; விஜய் அரசியலுக்கு வருவதை முன்னரே யூகித்து எழுதினீர்களா என என்னிடம் கேட்கிறார்கள். அதெல்லாம் இல்லை அப்போ ட்யூனுக்குத்தான் எழுதுனேன்.

அதுமட்டுமில்லாம சினிமாவுல புகழடைந்த பிறகு அரசியலுக்குத்தானே வருவாங்க என பதில் சொன்னேன். எதுவாக இருந்தாலும் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என விஜய் வெறித்தனமாக இருந்தார். வென்றே ஆக வேண்டும் என்ற அந்த வெறி விஜய்க்கு அதிகமாகவே இருந்தது” என்றார்.

இசையமைப்பாளர் பரணி பெரியண்ணா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து சார்லி சாப்ளின்,பார்வை ஒன்றே போதுமே போன்ற படங்களுக்கு இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தகது.

சற்று முன்