இயக்குனர் சுந்தர் சி படங்கள் என்றாலே அது ஜாலியான படங்களாக தான் இருக்கும். பெஷ்டிவல் பிலிம்ஸ் என்றால், அதில் சுந்தர் சி இயக்கிய படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும். அப்படி பல கலகலப்பான படங்களை ரசிகர்களை தந்து வருகிறார் சுந்தர் சி. காதல் காமெடி கவர்ச்சி தான் சுந்தர் சியின் தாரக மந்திரமாக தமிழ் சினிமாவில் ஜெயித்து வருகிறது.
கடந்த 2013ம் ஆண்டில் விஷால் பிலிம் பேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் இணைந்து தயாரித்த படம் மதகஜ ராஜா. இந்த படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார். விஷால் சந்தானம் வரலட்சுமி சரத்குமார் அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் முதன் முறையாக நடிகர் விஷால் சொந்த குரலில் ஒரு பாடலும் பாடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிதின் சத்யா சோனா ஷூட் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன் மனோபாலா போன்றவர்களும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தானம் காமெடி நடிகராக முன்னணியில் இருந்த போது இந்த படம் உருவானது.
ஆனால் கடந்த 2013ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக வேண்டிய இந்த பல்வேறு காரணங்களால் 12 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடந்தது. இப்போது வருகிற 12ம் தேதி பொங்கல் ரிலீஸாக இந்த படம் திரைக்கு வருகிறது.
படத்தின் பிரமோசன் பணிகளில் இயக்குனர் சுந்தர் சி தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் மதகஜ ராஜா படத்தின் புதிய டிரெய்லர் இன்று வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் விஷால், சந்தானம், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி உள்ளிட்டோர் வரும் காட்சிகளும், வசனங்களும் தாறுமாறாக ரசிக்கும்படி உள்ளன. குறிப்பாக சந்தானம் அவரது ஸ்டைலில் பேசிய வசனங்களில் காமெடி அசத்துகின்றன.
வழக்கமாக வாத்தியார் பாடம் நடத்தி பரீட்சை வைப்பாரு. ஆனா வாழ்க்கைங்கற வாத்தியார் மட்டும் பரீட்சை வெச்சுதான் பாடமே நடத்துவாரு போன்ற நச் வசனங்களை பேசி விஷால் நடித்திருக்கிறார். மதகஜ ராஜா டிரெய்லர் இப்போது வைரலாகி வருகிறது.
மதகஜ ராஜா டிரெய்லரை காண இந்த இடத்தில் கிளிக் செய்யவும்;https://www.youtube.com/watch?v=VxwoH2YrtzA





