தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக இருந்து வரும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். கடந்த ஆண்டு தனது ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படத்தை இயக்கி முடித்த தனுஷ் தற்போது, குபேரா படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கின் பிரபல இயக்குனர் சேகர் கமுலா இந்த படத்தை எடுத்து வருகிறார். இதில் நாகர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தையும் இருப்பது. அதில் தனுஷ் பிச்சைக்காரன் கெட்டப்பில் இருந்திருந்தார்.
சஸ்பென்ஸ் திரில்லராக இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாகவும், அவருக்கு கோடீஸ்வரர் கதாபாத்திரம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பையை தொடர்ந்து வெளிநாட்டில் இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படம் தனுஷின் 51 வது திரைப்படமாக உருவாகிறது.
அனேகமாக தனுஷிற்கு ராயன் மற்றும் குபேரா ஆகிய இரண்டு திரைப்படங்களும் இந்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படங்களை தொடர்ந்து அவர் இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த திரைப்படத்தை, ராக்கி, சாணி காகிதம், கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்களை எடுத்த அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இது போக, தனுஷின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படமும் இந்த ஆண்டு வெளியாகிறது. இப்படியான சூழலில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து இசையமைப்பாளர் சீன் ரோல்டான் மனம் திறந்து உள்ளார்.
இவர் தனுஷின் இயக்கத்தில் உருவான பவர் பாண்டி திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். அதன் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகின. இந்த நிலையில் தனது தனுசுடன் தான் இணையப் போகும் திரைப்படம் வேற லெவலில் இருக்கும் என்றும், சினிமாவையே புரட்டி போடுற அளவுக்கு ஒரு விஷயத்தை பண்ண போவதாகவும் கூறியிருக்கிறார். அதற்கான கால சூழல் இன்னும் வரவில்லை என்றும், விரைவில் இது கைகூடும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இசையமைப்பாளரின் இந்த பேச்சு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி உள்ளது.





