- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த மாதிரி கேரக்டர்ல நான் நடிக்க மாட்டேன், ஒரு ரசிகையா அந்த விஷயம் இருக்கா என்று...

அந்த மாதிரி கேரக்டர்ல நான் நடிக்க மாட்டேன், ஒரு ரசிகையா அந்த விஷயம் இருக்கா என்று பார்ப்பேன் – லப்பர் பந்து நாயகி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் லப்பர் பந்து படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி. மலையாளத்தில் பல படங்களில் நடித்த அவருக்கு லப்பர் பந்து படம் நல்ல ஒரு அடையாளத்தை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. இதில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக அவர் நடித்திருந்தார்.

தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் பரிமளா அண்ட் கோ படத்திலும் அதன்பிறகு சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற டிசி படத்திலும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடித்திருந்தார். தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தாலும் குறிப்பிட்ட கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது, எனக்கு பட வாய்ப்புகள் நிறைய வருகிறது. ஆனால் அந்த கேரக்டர் எனக்கு திருப்தியாக இல்லை என்றால் அதில் நடிக்க மாட்டேன். அதில் முக்கியத்துவம் என்ன என்றால் நான் போய் அதை தியேட்டரில் பார்ப்பேனா என்று யோசிப்பேன்.

நம்ம நாட்டில் தியேட்டரில் போய் ஒரு படத்தை ஒரு சந்தோஷமான விழாவாக பார்க்கும் கொண்டாடும் மனநிலை இருக்கிறது. அது எனக்கு திருப்தியாக இருக்குமா என்று யோசிப்பேன். ஏனென்றால் தியேட்டரில் போய் படம் பார்ப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்த அனுபவத்தை ரொம்பவும் நான் விரும்புவேன். நான் நடித்தாலும் சரி ஒர்க் பண்ணினாலும் சரி அந்த மாதிரி படங்கள் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

- Advertisement -

நான் அந்த படத்தில் ஏற்றுக்கொள்கிற கேரக்டர் எனக்கு பிடித்ததா? அந்த படத்தில் அந்த கேரக்டரில் முக்கியத்துவம் உள்ளதா? அல்லது ஏதோ ஒரு கேரக்டராக மட்டுமே அது உள்ளதா என்பதை எல்லாம் பார்த்துதான் நடிப்பேன். ஏதோ ஒரு பெண் கேரக்டர் அங்கு இருக்கணும் என்பது போன்ற ஒரு கேரக்டரில் நிச்சயமாக நான் நடிக்க மாட்டேன்.

இதற்கிடையே நான் 2 ஆண்டுகளாக படங்களில் நடிக்கவில்லை. வேறு வேலையில் நான் பிஸியாக இருந்ததால் நான் நடிக்க முடியவில்லை. அதனால் அந்த 2 ஆண்டு இடைவெளி விழுந்து விட்டது. ஆனால் இப்போது நான் பிஸியாக தான் இருக்கிறேன். தொடர்ந்து ஷூட்டிங் போய்க்கொண்டு இருக்கிறது என்று நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்