நடிகர் அஜீத்குமார், எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்குள் வந்தவர். சினிமா சார்ந்த யாருமே, அவருக்கு தெரியாத நிலையில், அவராகவே சினிமாவுக்குள் நுழைந்தார் என்பதுதான் உண்மை. ஆனால், அவரை சினிமாவுக்குள் கொண்டு வந்த பெருமை ஒரு பெரிய பாடகருக்கு உண்டு.
அதாவது, ஒரு விளம்பர படத்தில் அஜீத்குமார் நடித்துள்ளார். அப்போது இயக்குநர் வசந்த், அடுத்து அவர் இயக்கப்போகும் ஆசை படத்துக்கு இளமையான, அழகான கதாநாயகன் தேடிக்கொண்டு இருந்திருக்கிறார். இதை அப்போது பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திடம் தெரிவித்து இருக்கிறார்.
டிவியில் அஜீத்குமார் நடித்த விளம்பரத்தை பார்த்த எஸ்பிபி, உடனடியாக வசந்தை போனில் அழைத்து, விளம்பரத்தில் ஒரு இளைஞரை பார்த்தேன். அவர் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும் சொன்ன பிறகே, அஜீத்குமாரை தொடர்பு கொண்டு பேசி, ஆசை படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.
அப்படி சினிமாவுக்குள் நடிகராக வந்த அஜீத்குமார், இன்று உழைப்பாலும் திறமையாலும் பெரிய ஸ்டாராக இருக்கிறார். தனக்கு வாலி படம் மூலம் பெரிய கம்பேக் கொடுத்த எஸ்ஜே சூர்யாவுக்கு நிறைய உதவிகள் அப்போது செய்திருக்கிறார் அஜீத்குமார். புதிதாக கார் வாங்கி கொடுத்திருக்கிறார்.
ஆனால், விடாமுயற்சி படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில், அதற்கு முன்பாக இந்த படத்தை இயக்க வேண்டியவர் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன்தான். முதலில் அவரை டைரக்ட் செய்ய அனுமதித்த அஜீத், பிறகு கதை பிடிக்கவில்லை என நிராகரித்து விட்டார். இது விக்கி, நயன்தாராவை மிகவும் ஏமாற்றமடையச் செய்துவிட்டது.
இதற்கிடையே தனது அடுத்த படத்தை இயக்க, விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என அஜீத்குமார் முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. நான் நிராகரித்ததால், அவரது கேரியர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன், விக்னேஷ் சிவன் அடுத்த படம் யாருக்கு வாய்ப்பு என்ற குழப்பம் நிலவுகிறது. ஒருவேளை உருட்டாக இருக்குமோ என்றும் பேசப்படுகிறது.





