- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றது இவர்தானா? உறுதியான தகவல் …. கடைசி நேரத்தில் அவருக்கு...

பிக்பாஸ் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றது இவர்தானா? உறுதியான தகவல் …. கடைசி நேரத்தில் அவருக்கு வாய்ப்பு நழுவி விட்டதா?

- Advertisement -

கடந்த 104 நாட்களாக விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நடந்து வரும் நிலையில் இப்போது அது நிறைவு கட்டத்தை நெருங்கிவிட்டது. தற்போது இந்த சீசன் 8 டைட்டில் வின்னர் யார் என்பது குறித்த தகவலும் சற்றுமுன் வெளியாகி உள்ளது. இது எதிர்பார்த்த ஒரு போட்டியாளர்தான் வின்னர் ஆக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி துவங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 104 நாட்களை கடந்துள்ள நிலையில், இன்று டைட்டில் வின்னர் அறிவிப்புக்காக இறுதி கட்டத்தில் விஜய் சேதுபதி, பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார். பினாலே மேடைக்கு செல்லும் 5 போட்டியாளர்களாக முத்துக்குமரன் சௌந்தர்யா விஷால் பவித்ரா மற்றும் ரயான் ஆகியோர் வீட்டுக்குள் இருந்தனர்.

- Advertisement -

இந்த சீசன் 8 போட்டியில் பங்கேற்ற மற்ற போட்டியாளர்களும் பினாலே நெருங்கிய நிலையில் சில தினங்களுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வரவழைக்கப்பட்டனர். மற்ற போட்டியாளர்கள் இந்த பினாலே போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி டாஸ்க்குகளை செய்ய வைத்தனர்.

கடைசியாக நடத்தப்பட்ட பணப்பெட்டி போட்டியில் முத்துக்குமரன் 50 ஆயிரம் ரூபாய் ஜெயித்தார். விஷால் 5 லட்சம் ரூபாய் ஜெயித்தார். ரயானும் பவித்ராவும் தலா ரூ. 2 லட்சம் ரூபாய் ஜெயித்தனர். ஆனால் சௌந்தர்யா பணப்பெட்டியை எடுக்க சென்றுவிட்டு, கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக்கொண்டு திரும்பி ஓடி வந்துவிட்டார்.

- Advertisement -

ஆனால் அவர் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு திரும்பி ஓடி வந்திருந்தால் நிச்சயமாக குறிப்பிட்ட நேரம் கடந்து, அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருப்பார். அப்படிதான் ரூ. 8 லட்சம் பணப்பெட்டி எடுக்கச் சென்ற ஜாக்குலின், 2 விநாடிகள் தாமதமாக வந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் டைட்டில் வின்னராக பினாலே மேடையில் முத்துக்குமரனை நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். அடுத்து ரன்னர் ஆக 2ம் இடத்தில் சௌந்தர்யா இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் முத்துக்குமரன் இந்த டைட்டில் வின்னர் வெற்றியை பெற்றதாகவும் கூறப்படுகிறது. முதலில் டைட்டில் வின்னர் சௌந்தர்யா என பலரும் கூறிய நிலையில், கடைசி நேரத்தில் அது சௌந்தர்யாவுக்கு நழுவி முத்துக்குமரனுக்கு கிடைத்து விட்டது.

- Advertisement -

சற்று முன்