- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் மற்றும் அஜீத்குமார் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? கேரவனுக்குள் நடந்த அந்த விஷயம் - ஓபன் ஸ்டேட்மென்ட்...

விஜய் மற்றும் அஜீத்குமார் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? கேரவனுக்குள் நடந்த அந்த விஷயம் – ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த நடிகை தமன்னா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வியாபாரி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தமன்னா. பிறகு கல்லூரி படத்தில் அவரது இயல்பான நடிப்பு அதிக கவனம் பெற்றது. தொடர்ந்து விஜயுடன் சுறா அஜீத்குமாருடன் வீரம் தனுஷ் உடன் படிக்காதவன் வேங்கை மற்றும் பாகுபலி போன்ற பல படங்களில் தமன்னா மிகவும் அற்புதமான நடிப்பை வழங்கினார்.

அதன்பிறகு தெலுங்கு படங்களிலும் பிறகு இந்தி படங்களிலும் நடித்த அவர் இப்போது இந்தியில் நட்சத்திர நாயகியாக மாறியிருக்கிறார். ஒரு பாடலுக்கு நடனமாட மட்டும் ரூ. 6 கோடி வரை சம்பளம் பெறுகிறார். மேலும் ஜெயிலர் படத்தில் அவர் ஆடிய காவலய்யா பாடல் பெரிய அளவில் டிரண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் மும்பையில் சொந்தமாக நகைக்கடை ஒன்றை துவங்கிய நடிகை தமன்னா, மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். கடைசியாக தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் நடித்த தமன்னா, இப்போது மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக புருஷன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை தமன்னா கூறியதாவது, புருஷன் படத்தில் ஷூட்டிங்குக்காக சென்னைக்கு வந்தேன். அந்த ஷெட்யூல் முடிந்துவிட்டது. நாளைக்கு மும்பை செல்கிறேன். இந்த நிகழ்ச்சியில் நீங்கள் எல்லோரும் நல்ல எனர்ஜியோடு இருந்தீர்கள். ஒவ்வொரு மொமெண்டையும் நான் ரசித்து அனுபவித்தேன்.

- Advertisement -

நான் சினிமாத்துறைக்கு வந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டன. நீங்கள் எப்போதும் போல் எனக்கு அன்பு கொடுக்கிறீர்கள். அதற்கு நான் என்னுடைய நன்றியை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விஜயுடன் நான் சுறா என்ற படத்தில் நடித்தேன். அவர் ரொம்பவும் சிம்பிளான நபர். பேச்செல்லாம் குறைவாக தான் பேசுவார். ஆனால் அவரை மாதிரி யாராலும் நடனம் ஆட முடியாது.

நடிகர் அஜீத்குமாருடன் நான் பணியாற்றி இருக்கிறேன். வீரம் என்ற படத்தில் அவருடன் நான் இணைந்து நடித்தேன். அப்போது எனக்கு அவர் கேரவனில் சுடச்சுட இட்லி செய்து கொடுத்தார். அவர் ரொம்பவும் ஸ்வீட்டான நபர். பக்கா ஃபேமிலி மேன் என்று நடிகை தமன்னா கூறியிருக்கிறார். விஜய் அஜீத்குமார் குறித்து தமன்னா பாராட்டி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்