- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலா இயக்கத்தில் மிஷ்கின்? அதுவும் இந்த படத்திலா? ரெண்டு பேரும் சேர்ந்தா என்ன ஆகுமோ தெரியலயே

பாலா இயக்கத்தில் மிஷ்கின்? அதுவும் இந்த படத்திலா? ரெண்டு பேரும் சேர்ந்தா என்ன ஆகுமோ தெரியலயே

- Advertisement -

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர்களில் ஒருவராக திகழ்பவர். சமூகத்தில் கீழ்நிலையில் உள்ள எளிய மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து கதை உருவாக்குவதில் இயக்குனர் பாலா வல்லவர். அவரது திரைப்படங்களுக்கு ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் இருந்தாலும், பொதுஜன ரசிகர்கள் மத்தியில் பாலாவிற்கு அவ்வளவாக வரவேற்பு இருந்ததில்லை.

ஆனால் இயக்குனர் பாலா இயக்கிய, “நாச்சியார்” திரைப்படம் வெகுஜன ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து அவர் இயக்கிய “வர்மா” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதன் பின் சமீபத்தில் சூர்யாவை வைத்து இயக்கிய “வணங்கான்” திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகியதால் அத்திரைப்படத்தில் தற்போது அருண் விஜய் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் “வணங்கான்” திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளதாக ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது. இயக்குனர் மிஷ்கின் இயக்கிய “பிசாசு” திரைப்படத்தை பாலா தயாரித்திருந்தார். இயக்குனர் பாலா படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் கறாராக நடந்துக்கொள்பவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அவர் நடிகர் நடிகைகளை அடிக்கும் பல வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். ஒரு வகையில் மிஷ்கினும் கொஞ்சம் பாலாவை போலத்தான் என்று கூறப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் பாலாவும் மிஷ்கினும் இணைந்தால் எப்படி இருக்கும் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன.

மிஷ்கின் சமீப காலமாக பல திரைப்படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதே போல் “வணங்கான்” திரைப்படத்திலும் மிஷ்கின் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்