- Advertisement -
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது, எந்த ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சிறுபான்மையினரின் வாக்குகளை குறி வைத்து இந்துக்களை புண்படுத்தினாரோ, எந்த அரியணையை தக்கவைத்துக் கொள்வதற்காக பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக திரும்பினாரோ, எந்தப் பதவியை பாதுகாத்துக் கொள்ள நீதிமன்றங்களை பகைத்து கொண்டாரோ, அந்தப் பதவியும் ஆட்சியும் இந்த அரசும் இனி நெடுநாள் நீடிக்க போவதில்லை என்பது தற்போது தெள்ளத் தெளிவாக தெரிந்து விட்டது. இதே தவறை தான் அப்போது ஆட்சியில் இருந்த திமுகவும் செய்தது. தனது ஆட்சியை இழந்தது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார்.





