- Advertisement -
நேர்காணல் ஒன்றில் பேசிய தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியதாவது, கலெக்டருக்கு தவெக எம்எல்ஏ மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் தலைவர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற தமிழ்நாடே ஆவலாக எதிர்பார்க்கிறது. நானும் எதிர்பார்க்கிறேன். நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். அவருக்கு எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வருகிறது. அதற்காக அவரை கட்சியை விட்டு எல்லாம் நீக்க முடியாது. படாத பாடுபட்டு இந்த அரசாங்கத்தை தலைவர் இயக்கிக்கொண்டு இருக்கிறார். அதில் ஒரு எம்எல்ஏவை இழப்பது என்பது நினைத்து பார்க்கவே முடியாது. அதனால் இதுகுறித்து அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கடுமையாக எச்சரித்திருப்பதாக தகவல் வந்துள்ளது என்று நாஞ்சில் சம்பத் கூறியிருக்கிறார்.





