- Advertisement -
தற்போது புதிதாக அமைக்கப்பட்டு திறப்பு விழா செய்யப்பட உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பலவிதமான வருவாய் வரவுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 600 பேர் அமரும் வகையில் ஆடிட்டோரியம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கலை நிகழ்ச்சிகள், மீட்டிங் நடத்தும் வகையில் சென்சார் மைக் சிஸ்டம் தொழில்நுட்பத்துடன் ஆடிட்டோரியம் அமைக்கப்பட்டுள்ளது. 140 கார்களை நிறுத்தும் இடவசதியுடன் பார்க்கிங் உள்ளது. திருமண மண்டபமும் இங்கு உள்ளது. இது எல்லாம் சங்கத்தின் தலைவராக உள்ள நடிகர் நாசர் ஐடியா என்று தெரிய வந்துள்ளது. அதனால் சங்கத்துக்கு பல விதங்களில் பண வரவுக்கு வாய்ப்புள்ளது.





