- Advertisement -
Homeபொழுதுபோக்குரிக்‌ஷாக்காரன் படத்தில் நடித்த எம்ஜிஆருக்கு மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருது - தனது...

ரிக்‌ஷாக்காரன் படத்தில் நடித்த எம்ஜிஆருக்கு மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருது – தனது வெற்றியை புரட்சித் தலைவர் எப்படி கொண்டாடினார் தெரியுமா?

- Advertisement -

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடித்த பல வெற்றிப் படங்களில் மிக முக்கியமான ஒரு படம் ரிக்சாக்காரன். இந்த படம் கடந்த 1971ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி வெளியானது. இந்த படத்தை எம். கிருஷ்ணன் நாயர் என்பவர் டைரக்ட் செய்திருந்தார். சத்யா ஃபிலிம்ஸ் சார்பில் ஆர் எம் வீரப்பன் இந்த படத்தை தயாரித்திருந்தார்.

இந்த படத்துக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆனது. மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக எம்.ஜி.ஆர் ரிக்சா சைக்கிள் ஓட்டும் தொழிலாளியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் மஞ்சுளா நாயகியாக நடித்திருந்தார். பத்மினி மேஜர் சுந்தர்ராஜன் எஸ் ஏ அசோகன் மனோகர் தேங்காய் சீனிவாசன் சோ என்னத்தே கண்ணையா ஐசரி வேலன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ரிக்சாக்காரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருது கடந்த 1972ம் ஆண்டில் வழங்கப்பட்டது. இந்த படம் முழுவதும் ரிக்‌ஷா சைக்கிள் ஓட்டும் தொழிலாளியாக எம்ஜிஆர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிக்‌ஷாக்காரன் படத்தில் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு துவங்கும் முன்பே ரிக்‌ஷா தொழிலாளர்களின் வாழ்க்கையை நேரில் பார்த்து அவர்களிடம் ரிக்‌ஷா ஓட்டவும் எம்ஜிஆர் கற்றுக்கொண்டு பயிற்சி பெற்றார். அப்போது வெயில் மழை பாராமல் அவர்கள் தினமும் கஷ்டப்பட்டு உழைப்பதையும் எம்ஜிஆர் கவனித்து மனம் வருந்தியிருக்கிறார்.

இந்த சூழலில் ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளர்களின் தினசரி சிரமங்களை நேரில் பார்த்து புரிந்துக்கொண்ட புரட்சித் தலைவர் எம்ஜிஆர், தனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட பிறகு, அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 6 ஆயிரம் ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளர்களுக்கு ரெயின்கோட் வாங்கி இலவசமாக தந்திருக்கிறார்.

ஏனெனில் மழை காலத்தில் நனைந்தபடி ரிக்‌ஷா ஓட்டும் அவர்களின் சிரமத்தை போக்கும் விதமாக 6 ஆயிரம் பேருக்கு அவர் ரெயின்கோட் வாங்கி தந்து தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ரிக்‌ஷாக்காரன் படம் தந்த தேசிய விருதுக்கு நன்றியாக அந்த ரிக்‌ஷா ஓட்டும் 6 ஆயிரம் தொழிலாளிகளுக்கு ரெயின் கோட் வழங்கிய வள்ளல் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் கருணையான குணம்.

சற்று முன்