- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூர்யா மீது எனக்கு அப்படி ஒரு ஆசை இருக்கிறது, நடிகை கீர்த்தி சுரேஷ் சொன்ன...

நடிகர் சூர்யா மீது எனக்கு அப்படி ஒரு ஆசை இருக்கிறது, நடிகை கீர்த்தி சுரேஷ் சொன்ன விஷயத்தை கேட்டு வாயடைத்துப் போன ரசிகர்கள் – தளபதி தப்பிச்சுட்டாருப்பா!

- Advertisement -

நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த அழகான நடிகை. திறமையான நடிகையும் என்றால் அது மிகையல்ல. இவரது அப்பா சுரேஷ் மலையாள படங்கள் தயாரிப்பாளர். அம்மா மேனகாவும் ஒரு நடிகை. நெற்றிக்கண் படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தவர். இவரது பாட்டி கடைக்குட்டி சிங்கம் படத்தில், சத்யராஜின் அம்மாவாக நடித்திருந்தார்.

இப்படி கலைக்குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால், இளம்வயதிலேயே பல படங்களில் தனது சிறந்த, அழுத்தமான நடிப்பை கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். குறிப்பாக நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி கேரக்டரில் அவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் அசந்து போயினர்.

- Advertisement -

அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிப்பதற்காக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார். அதே போல் சிவகார்த்திகேயனுடன் ரெமோ, ரஜினி முருகன் படங்களிலும் கீர்த்தி நடிப்பு, ரசிகர்களிடம் வாவ் என்ற பாராட்டை பெற்றது.

தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் நடிக்க துவங்கியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தமிழில் அட்லி இயக்கத்தில் விஜய் சமந்தா நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் தெறி. இந்த படத்தை அட்லி இந்தியில் தயாரிக்கிறார். இந்த படத்தின் பெயர் பேபி ஜான். இந்த படத்தில் சமந்தா கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படம் வரும் டிசம்பரில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது.

- Advertisement -

இன்று கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ரகு தாத்தா என்ற படம் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை சுமன்குமார் டைரக்ட் செய்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் விஜயுடன் பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில், திரிஷா போலவே விஜய்க்கு மிக நெருக்கமான தோழியாக கீர்த்தி சுரேஷ் இருப்பதாக ஒரு தகவல் கோலிவுட்டில் இருந்து வருகிறது. ஆனால் இதற்கு கீர்த்தி இதுவரை மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறேன். இருந்தாலும் ஓய்வு நேரங்களில் கதைகளையும் எழுதி வருகிறேன். டைரக்‌ஷன் துறையில் அனைத்து தொழில்நுட்பங்களையும் தெரிந்துக்கொண்டு எதிர்காலத்தில் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. குறிப்பாக நடிகர் சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். அவருக்கான கதையை தயார் செய்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார். சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். நல்ல வேளை, தளபதி தப்பிச்சுட்டார் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்