பல ஆண்டுகளுக்கு முன்பு 1980களில் வெளியான படங்களில் கதாநாயகன், வில்லனை சந்திக்க ஒரு ஓட்டலில் அமர்ந்திருக்கும் போது அங்கு கலர் கலர் லைட்டுகள் பின்னணியில் காபரே டான்ஸ் நடக்கும். இதில் அனுராதா குயிலி ஜெயமாலினி சில்க் ஸ்மிதா போன்ற நாயகிகள் கவர்ச்சி நடனம் ஆடுவார்கள். அப்போது அதுதான் ஐட்டம் சாங்காக இருந்தது.
அதன்பிறகு 1990களுக்கு பிறகு கவர்ச்சி நடன பாடல்களை தனியாக கவர்ச்சி நடிகைகளுக்கு தராமல் நாயகிகளே அந்த பொறுப்பையும் அவர்களே ஏற்றுக்கொண்டனர். குறிப்பாக குஷ்பு மீனா ரோஜா நக்மா ரம்பா போன்ற நாயகிகள் கவர்ச்சி நடனங்களுக்கு குத்தாட்டம் போட்டனர். இதுவும் ஐட்டம் சாங்காக தான் இருந்தது.
அதன்பிறகு ஐட்டம் பாடலுக்கு படத்தின் நாயகி அல்லாத ஏதாவது பிரபல நடிகை டான்ஸ் ஆடும் வழக்கம் தமிழ் சினிமாவில் உருவானது. முதன் முறையாக ஜெண்டில்மேன் படத்தில் நடிகை கௌதமி ஐட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டார். அவருடன் பிரபுதேவா, ராஜூ சுந்தரம் இருவருமே ஆடியதால் அந்த பாட்டு பெரிய அளவில் ஹிட் ஆனது.
ஆனால் தொடர்ந்து அப்படி படங்களில் ஐட்டம் பாட்டுக்கு வேறு நாயகிகளை ஆட வைக்காமல், நாயகிகளையே இயக்குனர்கள் ஆட வைத்தனர். அதற்காக சம்பளத்தில் சில லட்சங்களை மட்டும் கூடுதலாக வாங்கிக் கொண்டு குஷ்பு நக்மா மீனா ரம்பா ரோஜா போன்றவர்கள் கவர்ச்சி பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினர்.
இந்நிலையில் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாட்டுக்கு சமந்தாவும், ஜெயிலர் படத்தில் காவலய்யா பாட்டுக்கு தமன்னாவும், தி கோட் பாட்டுக்கு நடிகை திரிஷாவும் புஷ்பா 2 படத்தில், கிஸ்சிக் பாட்டுக்கு ஸ்ரீ லீலாவும் குத்தாட்டம் போட்டிருந்தனர். இப்படி ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட பல கோடிகளை சம்பளமாக பெறுகின்றனர்.
சமந்தா தமன்னா ஸ்ரீலீலா திரிஷா வரிசையில் அடுத்து ஐட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போட நடிகை நயன்தாராவும் தயாராகி விட்டார். ஏற்கனவே நடிகர் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடிய நயன்தாரா, இப்போது பான் இந்தியா ஸ்டார் நடிகர் பிரபாஸ் நடிக்கும் ராஜாசாப் படத்தில் பிரபாஸூடன் இணைந்து ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட கமிட் ஆகியிருக்கிறார். இவர் பிரபாஸூடன் யோகி என்ற படத்தில் ஏற்கனவே நாயகியாக நடித்துள்ளார். குத்தாட போட சம்பளம் அதே ரூ. 12 கோடியா என்று ரசிகர்கள் ஆதங்கமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.





