- Advertisement -
Homeபொழுதுபோக்குசிம்பு, கவின் போன்றவர்களை தேர்வு செய்து நடிகை நயன்தாரா நடிக்க இதுதான் காரணமா? - அட…...

சிம்பு, கவின் போன்றவர்களை தேர்வு செய்து நடிகை நயன்தாரா நடிக்க இதுதான் காரணமா? – அட… இந்த கோணத்துல யாருமே யோசிக்கலையே…?

- Advertisement -

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை நயன்தாரா. கேரளாவில், மலையாள லோக்கல் டிவி சேனலில் காம்பியராக இருந்த டயானா மரியா குட்டன் என்ற பெயரை நயன்தாரா என பெயர் மாற்றம் செய்து, மானசிகாரே என்ற மலையாள படத்தில் நடிக்க வைத்தனர். அந்த படத்தை தொடர்ந்து தமிழில், ஹரி இயக்கத்தில் ஐயா படத்தில், சரத்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா அறிமுகமானார்.

குடும்ப கதையில் அதிரடி சண்டை காட்சிகள், காதல் மற்றும் காமெடி கலந்து நல்ல வெற்றிப் படங்களை தந்த இயக்குனர் ஹரி படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால் ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாராவுக்கு, முதல் படத்திலேயே மிகப்பெரிய அடையாளமும், அங்கீகாரமும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது.

- Advertisement -

அதுவும், ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் என்ற பாடல் காட்சியில் நடித்து ரசிகர்களின் மனதை தனது வசீகர அழகால் கொள்ளையடித்த நயன்தாரா தொடர்ந்து சிலம்பரசன், ரஜினிகாந்த், விஜய், அஜீத்குமார், தனுஷ், சூர்யா, விக்ரம் போன்ற மாஸ் ஹீரோக்களுடன் நடித்து, முன்னணி நடிகையாக மாறினார். இப்போது லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக ரூ. 12 கோடி வாங்கும் அளவுக்கு நயன்தாரா, இமேஜ் இப்போது இருந்து வருகிறது. திருமணமான பிறகும் நயன்தாராவின் மார்க்கெட் இன்னும் சிறிதும் குறையவே இல்லை. அவரது கால்ஷீட்டுக்காக இப்போதும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்து வருகின்றனர். எனினும் அவர் கடைசியாக நடித்த 75வது படம் அன்னபூரணி படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

- Advertisement -

இப்போது நடிகர் கவினுடன் ஒரு படத்தில் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தின் கதைப்படி, வயது மூத்த பெண்ணுடன் கவின் காதல் கொள்வது போலவும், அவருடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது போலவும் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 40 வயதுகளை கடந்த நயன்தாரா தன்னை விட வயது குறைந்த இளம் கதாநயாகன் கவினுடன் இப்படி நெருக்கமாக நடிப்பது ஏன் என்ற கேள்விக்கு இப்போது விடை தெரிய வந்துள்ளது.

அதாவது ஐயா படத்தில் நயன்தாரா நடித்த போது, வயதில் மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிப்பதாக ஒரு தோற்றம் ஏற்பட்டது. பிறகு சிம்பு, தனுஷ் போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்தார். இப்போது ஜவான் படத்தில் ஷாருக்கான், அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்த நிலையில், கவினுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படி இளம் வயது நாயகர்களுடன் நடித்து, தன்னை இளம் நாயகியாக காட்டிக்கொள்ளும் ஒரு யுக்தியை நயன்தாரா கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்