தொலைக்காட்சி வர்ணனையாளராக கரியரை துவங்கிய நயன்தாரா தமிழ் திரையுலகில் சரத்குமார் உடன் நடித்த ஐயா படம் மூலம் அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைய அடுத்தடுத்த வாய்ப்புகள் கோலிவுட்டில் அவரை தேடி வந்தன. அதனை தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களோடு இணைந்து நடித்த நயன்தாரா சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகி படத்திலும் நடித்ததால் முன்னணி நடிகையாகவும் உயர்ந்தார்.

அதன் பிறகு வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுடன் ஏற்பட்ட காதல் சில ஆண்டுகளிலேயே முடிவடைய அடுத்ததாக பிரபுதேவாவை காதலித்த நயன்தாரா அவரை திருமணம் செய்து கொள்வதற்காக ஹிந்து மதத்திற்கும் மாறி இருந்தார்.
பின்னர் அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியவே சினிமாவிலிருந்து சிறிது பிரேக் எடுத்துக் கொண்ட நயன்தாரா மீண்டும் “ராஜா ராணி” படம் மூலம் கம்பேக் கொடுத்து அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று லேடீ சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார். தற்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் நயன்தாராவின் நடிப்பில் அடுத்ததாக ஜவான் படம் வெளியாக காத்திருக்கிறது.

அதோடு நயன்தாரா தமிழில் தனது 75-வது படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கவும் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நயன்தாரா தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்க வேண்டிய வாய்ப்பை தவற விட்டுவிள்ளார் என்று ஒரு தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியில் கவனத்தில் ஈர்த்துள்ளது. அந்த வகையில் தனுஷ் நித்யா மேனன் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நயன்தாரா தான்.
அவரிடம் அந்த படத்திற்கான கால்ஷீட் குறித்த விவரங்களை பேசியபோது அப்போது தனிப்பட்ட காரணங்களால் நயன்தாராவால் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே அந்த கேரக்டரில் நித்தியாமேனன் நடித்தார். சூப்பர் ஹிட் படமான இந்த படத்தினை அவர் தவறவிட்டுள்ளது செய்தியாக தற்போது வெளியாகி உள்ளது. தனுஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் “யாரடி நீ மோகினி” படம் பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.





