- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத் படத்துக்கு அஜீத் படத்தால் இப்படி ஒரு சிக்கலா? ரஜினி குறுக்கீடு காரணமாக ஆதிக்...

அஜீத் படத்துக்கு அஜீத் படத்தால் இப்படி ஒரு சிக்கலா? ரஜினி குறுக்கீடு காரணமாக ஆதிக் ரவிச்சந்திரன் எடுத்த அதிரடி முடிவு – குட்பேட் அக்லி ரிலீஸ் ரொம்ப தூரம் தள்ளிப் போகிறதா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் துணிவு. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி, பொங்கல் பண்டிகை படமாக இந்த படம் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை எச் வினோத் டைரக்ட் செய்திருந்தார். இந்த படமும், விஜய் நடித்த வாரிசு படமும் ஒரே நேரத்தில் ரீலிஸானது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் நடிகர் விஜய் நடிப்பு வாரிசு படத்தை தொடர்ந்து, கடந்த ஆண்டில் லியோ படம் வெளியானது. இதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற லியோ படம், வசூல் ரீதியாக வெற்றிப் படமாக இருந்தது. இதில் திரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மடோனா, மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

- Advertisement -

அதன்பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாக 45 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இன்னும் 6 நாட்களே உள்ளன.

ஆனால் அஜீத்குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி, குட்பேட் அக்லி படங்கள் இன்னும் படப்பிடிப்பில்தான் இருந்து வருகின்றன. வருகிற தீபாவளிக்கு விடாமுயற்சி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் படத்தில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் மீதம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

அதுதவிர விடாமுயற்சி படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் இன்னும் துவங்கப்படவே இல்லை. அதனால் விடாமுயற்சி படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வாய்ப்பில்லை. அதனால் தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸ் செய்ய டைரக்டர் மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளார். அதனால் அன்று அஜீத்குமார் நடித்த மற்றொரு படமான குட்பேக் அக்லி படத்தை, தமிழ் புத்தாண்டில் வெளியிட முடியாத நிலை, ஏற்பட்டுள்ளது.

அதன்பிறகு குட்பேட் அக்லி படத்தை ஏப்ரல் 14ம் தேதி, தமிழ் புத்தாண்டு அன்று வௌியிடலாம் என்று படத்தின் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டிருந்த நிலையில், அதே நாளில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் ரிலீஸாகிறது. அதனால் குட்பேட் அக்லி படத்தை மே மாதம் ரிலீஸ் செய்யலாம். அதுவும் அஜீத்குமார் பிறந்த நாளான மே 1ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்