- Advertisement -
Homeபொழுதுபோக்குபழைய கெத்து எல்லாம் இனி எடுபடாது போல, சுந்தர் சி படத்துக்காக நடிகை நயன்தாரா எடுத்த...

பழைய கெத்து எல்லாம் இனி எடுபடாது போல, சுந்தர் சி படத்துக்காக நடிகை நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு – அப்படி வாங்க வழிக்கு என கலாய்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் திரையில் தான் நடிப்பில் ஸ்டைலில் அந்த கெத்தை ரஜினிகாந்த் காட்டுவாரே தவிர நிஜத்தில் நேரில் மிகவும் பணிவாக அன்பாக மென்மையாக ரஜினிகாந்த் நடந்துக்கொள்வார் என்பதே உண்மை.

ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட அல்லது அடைமொழி வைத்துக்கொண்ட நடிகை நயன்தாரா, நிஜத்தில் பெரிய அளவில் கெத்து காட்டினார். காலை 11 மணிக்கு ஷூட்டிங் வந்துவிட்டு மாலை 5 மணிக்கு வீட்டுக்கு கிளம்பி விடுவார். இரவு படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள மாட்டார்.

- Advertisement -

மேலும் அழுகை காட்சிகளில் கண்களில் கிளிசரின் விட்டு நடிக்க மாட்டேன் என்பார். படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு பாதுகாப்பாக வரும் பவுன்சர்கள், குழந்தைகளுடன் வரும் பராமரிப்பாளர்கள் நர்ஸ்கள் என 10க்கும் மேற்பட்டவர்களுக்கு தினமும் லட்சக்கணக்கில் சம்பளம் தயாரிப்பாளர் தான் கொடுக்க வேண்டும்.

குறிப்பாக நயன்தாரா நடிக்கும் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக அவர் கலந்துக்கொள்ள மாட்டார். ஆனால் அதுவே அவரது கணவர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் என்றால் நயன்தாரா நடிக்காவிட்டாலும் அந்த படத்தின் பிரமோசனில் கலந்துக்கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கமாக இருந்தது.

- Advertisement -

ஆனால் சமீபகாலமாக நயன்தாராவின் இந்த போக்கில் அப்படியே பெரிய மாற்றம் வந்திருக்கிறது. சமீபத்தில் பெங்களூருவில் நடந்த நடிகர் யஷ் நடித்த டாக்ஸிக் பட விழாவில் நடிகை நயன்தாரா கலந்துக்கொண்டு பேசினார். பிறகு நடிகர் கவினுடன் அவர் நடித்துள்ள ஹாய் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் திருச்சியில் நயன்தாரா கலந்துக்கொண்டு பேசியிருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக அடுத்தபடியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடிகை நயன்தாரா கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இனி பழைய கெத்த காட்டினால் தனக்கு பட வாய்ப்பே இருக்காது என்பதால் நயன்தாரா இப்படி இறங்கி வருகிறார் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்