- Advertisement -
திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நடிகை நயன்தாராவுக்கு அடுத்தடுத்து வெளியான படங்கள் படுதோல்வி அடைந்துள்ளன. குறிப்பாக மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட டாக்ஸிக் மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட படங்களும் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளன. அதனால் கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஒரு ஓய்வு எடுக்க அவர் முடிவு செய்திருப்பதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. சில ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடிக்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் இப்போதைய சூழ்நிலையில் அவர் நடிக்கும் எந்த படமும் வெற்றி அடையாததால் இந்த அதிரடி முடிவுக்கு நடிகை நயன்தாரா வந்திருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.





