- Advertisement -
Homeபொழுதுபோக்குமூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாராவின் கேரக்டர்… யூனிபார்ம் டிரஸ் போட மறுத்த நாயகி -...

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாராவின் கேரக்டர்… யூனிபார்ம் டிரஸ் போட மறுத்த நாயகி – இயக்குனர் சுந்தர் சி எடுத்த அதிரடி ஆக்‌ஷன்!

- Advertisement -

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். ரெஜினா கசாண்ட்ரா அபிநயா இனியா யோகிபாபு துனியா விஜய் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

மூக்குத்தி அம்மன் 2 படம் இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதைக்கள சம்படங்களை படமாக உருவாகிறது. இதில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் மூக்குத்தி அம்மனாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். அதே போல் நடப்பு காலத்தில் நடக்கும் சம்பவங்களும் இந்த படத்தில் வருகிறது.

- Advertisement -

அதில் நடப்பு காலத்தில் நடக்கும் கதைக்களத்தில் நடிகை நயன்தாரா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதற்கு முன்பே இமைக்கா நொடிகள் ஜவான் போன்ற சில படங்களில் நயன்தாரா போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆனால் அவர் போலீஸ் யூனிபார்ம் காக்கி உடை அணிந்து நடித்தது இல்லை. ஆனால் போலீஸ் கேரக்டர் என்றாலே அந்த காக்கி யூனிபார்ம்தான் கம்பீரம் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் குறிப்பாக விஜயகாந்த் அர்ஜூன் மற்றும் சத்யராஜ் சரத்குமார் விஜய் அஜீத்குமார் சூர்யா விக்ரம் போன்றவர்களுக்கு பல படங்களில் அவர்கள் ஏற்று நடித்த போலீஸ் கேரக்டரே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் நயன்தாரா போலீஸ் சீருடை அணிந்து நடிப்பதை தவிர்க்கிறார்.

- Advertisement -

இந்த சூழலில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறேன், ஆனால் காக்கி யூனிபார்ம் அணிந்து நடிக்க மாட்டேன். அப்படி நடிப்பதில் எனக்கு சென்டிமென்ட் ஆக சில மனத்தடைகள் இருக்கிறது. அதனால் காக்கி டிரஸ் அணிய மாட்டேன் என்று இயக்குனர் சுந்தர் சியிடம் நேரடியாகவே நயன்தாரா கூறியிருக்கிறார்.

போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கும் நீங்கள் போலீஸ் சீருடை அணியாமல் நடித்தால் அது படத்தில் சரியாக வராது. வேண்டுமென்றால் போலீஸ் சீருடையில் நீங்கள் வரும் காட்சிகளை முடிந்த வரை குறைத்து விடுகிறேன். அதற்காக ஒட்டுமொத்தமாக சீருடையே நீங்கள் அணியாமல் மப்டி உடையில் நடிக்க வாய்ப்பில்லை. போலீஸ் உடையில் நீங்கள் வரும் காட்சிகளை மட்டுமே குறைக்க முடியும் என்று அதிரடியாக கூறிவிட்டார். இதற்கு நயன்தாராவும் வேறு வழியின்றி கடைசியில் ஓகே சொல்லியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்