- Advertisement -
Homeபொழுதுபோக்குநேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா கேரக்டரில் நடிக்க கமிட் ஆன நடிகை நயன்தாரா - காஞ்சனா...

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா கேரக்டரில் நடிக்க கமிட் ஆன நடிகை நயன்தாரா – காஞ்சனா 4 படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

அரசியலுக்கு வருவதற்கு முன்பே கடுமையான விமர்சனங்களை கடந்த சில நாட்களாக சந்தித்து வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என அவர் மக்களிடம் கருத்து கேட்டதே கொஞ்சம் ஓவர் பில்டப்பாக உள்ளது என்று பலரும் விமர்சித்த நிலையில், அம்மா சொன்னதால் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னதும் பலருக்கு கடுப்பை கிளப்பியது.

இதற்கு மத்தியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், தெருநாய்களுக்கு பிஸ்கட் பிரியாணி பிடிப்பது போல மக்களுக்கு என்ன வேண்டும் என்று தெரிந்து செய்வதற்கு தவெக ஆட்சிக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் பேசியதும் பெரிய அளவில் சர்ச்சையாகி விட்டது. மக்களை நாய்களுடன் ஒப்பிட்டு அவர் பேசியது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து காஞ்சனா சீரிஸ் படங்களை இயக்கி தயாரித்து வருகிறார். பல மாதங்களாக காஞ்சனா 4 படம் உருவாகி வருகிறது. திரில்லர் காமெடி கதைக்களத்தில் உருவான முனி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ் காஞ்சனா சீரிஸ் படங்களை தயாரித்து வெற்றி பெற்று வருகிறார்.

அந்த வரிசையில் முனி காஞ்சனா 2 காஞ்சனா 3 ஆகிய படங்களை தொடர்ந்து இப்போது காஞ்சனா 4 என்ற படத்தை அவரே இயக்கி தயாரித்து வருகிறார். இந்த படத்தில் வழக்கம் போல அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மற்றொரு இந்தி நடிகையும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

- Advertisement -

மேலும் இந்த படத்தில் லேட்டஸ்ட் தகவலாக நடிகை நயன்தாராவும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சிகளில் நடிகை நயன்தாராவும் வருகிறார். அதற்காக அவர் கமிட் ஆன நிலையில் வருகிற 20ம் தேதி முதல் நயன்தாரா நடிக்கும் காட்சிகளை படமாக்கும் பணிகளில் ராகவா லாரன்ஸ் ஈடுபட்டு வருகிறார்.

காஞ்சனா 4 படத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனவர் நேஷனல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா தான். ஆனால் அவர் சமீபத்தில் தான் நடிகர் விஜய தேவரகொண்டா ரெட்டியை காதல் திருமணம் செய்திருக்கிறார். இந்த சூழலில் அவர் காஞ்சனா 4 படத்தில் நடிக்க விருப்பமின்றி விலகி விட்டதால் அவருக்கு பதிலாக அந்த கேரக்டரில் நடிகை நயன்தாரா நடிப்பது உறுதியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்