- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் 6 தலைமுறைகளுடன் நடித்து விட்டேன், நடிகை நயன்தாரா சொன்னதை கேட்டு தலைசுத்திப் போன ரசிகர்கள்...

நான் 6 தலைமுறைகளுடன் நடித்து விட்டேன், நடிகை நயன்தாரா சொன்னதை கேட்டு தலைசுத்திப் போன ரசிகர்கள் – அப்படி என்றால் 200 வயதாகி விட்டதா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. அதிக சம்பளம் நாயகியாகவும் இவர் இருக்கிறார். ஒரு படத்தில் நடிக்க நயன்தாரா ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அவரது 75வது படமாக வெளியான அன்னபூரணி படம் போதிய வரவேற்பை பெறவில்லை.

அதன்பிறகு இப்போது சுந்தர் சி இயக்கத்தில், வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. அதற்கு முன் நயன்தாரா நடிப்பில் உருவான மண்ணாங்கட்டி படம் வெளிவர உள்ளது. நடிகர் கவினுடன் இப்போது ஒரு படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

- Advertisement -

நயன்தாரா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் ஒரு பிரபல நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் நடிகர் தனுஷ் குறித்து விமர்சித்து அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பிரபல சினிமாத்துறை விமர்சகர்களை, யூடியூப் செய்தியாளர்கள் 3 பேரை குரங்குகள் என நேர்காணல் ஒன்றில் திட்டியிருக்கிறார். இது தற்போது சர்ச்சையாகி உள்ளது.

நயன்தாராவின் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன், சமீபத்தில் புதுச்சேரிக்கு சென்ற போது, அங்கு அமைச்சர் ஒருவரை சந்தித்து அரசுக்கு சொந்தமான சீகல்ஸ் ஓட்டலை விலைக்கு கேட்டிருக்கிறார். அரசு சொத்து என்று அமைச்சர் கூறியும் என்ன விலை என்றாலும் வாங்கிக் கொள்ள தயார் என்று விக்னேஷ் சிவன் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை நயன்தாரா, நான் 6 தலைமுறை நடிகை என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் இப்போது 6வது தலைமுறை நடிகர் கவினுடன் நடித்து வருகிறேன். ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி எல்லாம் முதல் தலைமுறை. விஜய், அஜீத் 2வது தலைமுறை, சூர்யா, விக்ரம் 3வது தலைமுறை, தனுஷ், சிம்பு 4வது தலைமுறை, சிவகார்த்திகேயன் 5வது தலைமுறை, கவின் 6வது தலைமுறை என்று கூறியிருக்கிறார்.

நடிகை நயன்தாரா சொன்ன இந்த விளக்கத்தை கேட்டு ரசிகர்கள் தலைசுத்திப் போயுள்ளனர். நயன்தாரா சொல்வதை பார்த்தால் ஒரு தலைமுறைக்கு 33 வயது என்றால், 6 தலைமுறை நடிகர்களுடன் நடித்த நயன்தாரா 200 வயது தாண்டி விட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்