- Advertisement -
Homeபொழுதுபோக்குநயன்தாரா 75 படத்தின் பெயர் இதுவா?, வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவில் அட்ராசிட்டி கிளப்பிய நயன்தாரா...

நயன்தாரா 75 படத்தின் பெயர் இதுவா?, வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவில் அட்ராசிட்டி கிளப்பிய நயன்தாரா – பிராமணப் பெண் பண்ற வேலையா இது?

- Advertisement -

நடிகை நயன்தாரா, தற்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடிக்கிறார். இதையடுத்து, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் அவரது 234வது படத்தில், கமலுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவின் தற்போதைய சம்பளம் ரூ. 12 கோடி என கூறப்படுகிறது.

நானும் ரவுடிதான் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்துக்கொண்ட நயன்தாரா, இப்போது வாடகைத்தாய் பெற்றுக்கொடுத்த இரட்டை குழந்தைகளுடன், கணவர் விக்கியுடன் சந்தோஷமாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார். எனினும், திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் அவரது பயணம், முன்பு போலவே பிஸியாக தொடர்கிறது.

- Advertisement -

இயக்குநர் ஹரி இயக்கத்தில், ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என இதுவரை 74 படங்களில் நடித்திருக்கிறார். ஜவான் படம் மூலம், பாலிவுட்டிலும் காலடி பதித்து விட்டார். இதைத்தொடர்ந்து நயன்தாரா 75 என்ற தற்காலிக பெயருடன் ஒரு படம் எடுக்கப்பட்டு வருகிறது.

நிலேஷ் கிருஷ்ணா என்ற புதுமுக இயக்குநர், நயன்தாராவின் 75வது படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாராவுக்கு ஜோடியாக, ராஜா ராணி படத்துக்கு பிறகு, ஜெய் நடிக்கிறார். சத்யராஜ், ரேணுகா, பூர்ணிமா ரவி, சுரேஷ் சக்ரவர்த்தி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்துக்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார்.

- Advertisement -

நயன்தாரா 75 என்ற இந்த படத்துக்கு, அன்னபூரணி என பெயரிடப்பட்டு உள்ளது.இந்த படத்தின் வீடியோ கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகி உள்ளது. இதில் ஆச்சாரமான பிராமண குடும்பம் காட்டப்படுகிறது. இதில் பூஜையறையில் ஆரத்தி காட்டி பூஜை நடக்கிறது. பெரியவர் ஒருவர் சந்தியாவதனம் செய்கிறார். ஒரு வயதான பெண்மணி கையில் மாலை உருட்டி இறை நாமங்களை சொல்கிறார்.

அப்போது கட்டிலில் தாவணி, பாவாடையில் அமர்ந்துள்ள பிராமணப் பெண்ணான நயன்தாரா, கையில் ஏந்தியபடி இருக்கும் ஆங்கில புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அந்த ஆங்கில புத்தகத்திற்கு உள்ளே இருக்கும் வேறு ஒரு புத்தகத்தில் நான்கைந்து சிக்கன் லெக்பீஸ்கள் கலர்புல்லாக தெரிகின்றன. அதை நயன்தாரா ரசித்து பார்த்தபடி சிரிக்கிறார். இப்படி ஒரு வீடியோக கிளிம்ப்ஸ்சில், அன்னபூரணி என்ற டைட்டிலில் வரும் இந்த படம், அலப்பரையைக் கௌப்பும் என்பதில் சந்தேகமே இல்லை.

- Advertisement -

சற்று முன்