- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சத்யராஜ் குடும்பத்தில் 4 ஆண்டுகளாக நீடிக்கும் சோகம், இதுவரை வெளியில் சொல்லாதது ஏன்?- ...

நடிகர் சத்யராஜ் குடும்பத்தில் 4 ஆண்டுகளாக நீடிக்கும் சோகம், இதுவரை வெளியில் சொல்லாதது ஏன்?- இத்தனை வேதனையிலும் மனிதர் சகஜமாக நடிக்கிறாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகராக இருப்பவர் சத்யராஜ். துவக்கத்தில் வில்லனாக நடித்த சத்யராஜ், மணிவண்ணன் இயக்கிய 100வது நாள், 24 மணி நேரம், முதல் வசந்தம் போன்ற படங்களில் ரசிகர்களை மிரட்டினார். ஒரு கட்டத்துக்கு பிறகு நாயகனாக நடித்து வெற்றி பெற்றார்.

கடலோர கவிதைகள் படம் மூலம் சத்யராஜை நாயகனாக்கி இமேஜை உயர்த்தினார் இயக்குனர் பாரதிராஜா. நடிகர் கமல் தயாரிப்பில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தில் சத்யராஜ் நடிப்பு அவரை சிறந்த நாயகனாக மாற்றியது. காக்கிச்சட்டை, மங்கம்மா சபதம் என கமலுக்கு பல படங்களில் வில்லனாக நடித்தவர் சத்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதன்பிறகு திருமதி பழனிசாமி, ரிக்‌ஷா மாமா, பிரம்மா, நடிகன், பங்காளி, தெற்கு தெரு மச்சான், அமைதிப்படை உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக சத்யராஜ் வெற்றி பெற்றார். வில்லாதி வில்லன் என்ற படத்தை சத்யராஜே இயக்கி 2 வேடங்களில் நடித்திருந்தார்.

இப்போதும் தமிழ் சினிமாவில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக, ஹீரோயின் அப்பாவாக பல படங்களில் சத்யராஜ் நடித்து வருகிறார். மிஸ்டர் பாரத் படத்துக்கு பிறகு 38 ஆண்டுகள் கழித்து நடிகர் ரஜினியுடன் கூலி படத்தில் சத்யராஜ் இப்போது நடித்து வருகிறார். தனுஷ் இயக்கத்தில் இட்லிக்கடை படத்திலும் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

- Advertisement -

நடிகர் சத்யராஜ் தனது அக்கா மகள் மகேஸ்வரி என்பவரை 1980களின் இறுதியில் திருமணம் செய்துக்கொண்டார். திவ்யா, சிபிராஜ் என 2 பிள்ளைகள் உள்ளனர். சிபிராஜ் சில படங்களில் நடித்திருக்கிறார். திவ்யா, அவ்வப்போது சில பதிவுகளை தனது வலைதள பக்கங்களில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் திவ்யா கூறுகையில், என் அம்மா 4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறார். அம்மாவுக்கு பிஇஜி குழாய் மூலமாக தான் உணவு தருகிறோம். இதனால் நாங்கள் முற்றிலும் உடைந்து போயிருக்கிறோம். ஆனால் நம்பிக்கையோடு மருத்துவ முன்னேற்றத்திற்காக காத்திருப்போம். அப்பா 4 ஆண்டுகளாக சிங்கிள் பேரண்ட் ஆக இருக்கிறார், என்று கூறியிருக்கிறார். ஆனால் இதுவரை சத்யராஜ் தன் குடும்பத்தில் உள்ள சோகம் பற்றி எங்குமே சொல்லாமல் மவுனமாக இருந்து வருகிறார்.

- Advertisement -

சற்று முன்