- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் இயக்கியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் இப்படி தான் இருக்கப்போகிறது... வெளியான...

தனுஷ் இயக்கியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் இப்படி தான் இருக்கப்போகிறது… வெளியான சுவாரசிய தகவல்…

- Advertisement -

தனுஷ் தற்போது நடிப்பை தாண்டி இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். அவரது இயக்கத்தில் இரண்டாவது திரைப்படம் ஆக ராயன் கடந்த ஆண்டு வெளியானது. வசூல் ரீதியாக இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ஆனால் விமர்சனம் ரீதியாக பலரையும் இந்த திரைப்படம் கவரவில்லை.

இருப்பினும் தனுஷ் தனது இயக்கத்தின் விருப்பத்தை விட்ட பாடு இல்லை. அடுத்ததாக அவர், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்னும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். தனுஷின் வொண்டர் பார் நிறுவனம்தான் இதனை தயாரித்து இருக்கிறது. இதில் தனுஷின் சகோதரி மகன் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இதுபோக லியோ திரைப்படத்தில் விஜய் மகனாக நடித்து பலரது கவனத்தையும் பெற்ற, மேத்யூ தாமஸ் இதில் இடம் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் குறிப்பிடத்தக்க சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அஜித் குமாரின் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் படங்களில் இடம்பெற்று இருந்த, அனிதா சுரேந்திரனும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் முதலில் பிப்ரவரி 7ஆம் தேதி தான் வெளியாவதாக இருந்தது. ஆனால் அதற்கு முந்தைய நாளில் விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இரண்டையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவதால், ரிலீஸ் தேதியிலிருந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் பின்வாங்கி இருக்கிறது. அதன்படி அடுத்த மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இன்றைய கால இளைஞர்களின் காதலை மையப்படுத்தியே இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார் தனுஷ். இதற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து கோல்டன் ஸ்பேரோ பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. தற்போது படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

ஏற்கனவே இதன் பிரிவியூசோவில் முக்கியமான நபர்கள் பார்த்து படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். அதன்படி இந்த திரைப்படம் மலையாளத்தில் வெளியான பிரேமலு போன்று நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக எடுக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். காட்சிக்கு காட்சி தனுஷ், இயக்கத்தில் அசத்திருப்பதாகவும் பேசி வருகிறார்கள். இந்த திரைப்படம் வெற்றி பெறுவது உறுதி என சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

- Advertisement -

சற்று முன்