- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் பற்றி முன்னரே கணித்த விஜய்.. தளபதி வேற லெவல் மனுஷனா இருக்காரு.. நெல்சன் பகிர்ந்த்...

ஜெயிலர் பற்றி முன்னரே கணித்த விஜய்.. தளபதி வேற லெவல் மனுஷனா இருக்காரு.. நெல்சன் பகிர்ந்த் சீக்ரெட்

- Advertisement -

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் ரஜினிகாந்த்தை வைத்து கடைசியாக ஜெயிலர் படத்தை இயக்கினார். கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி படம் நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்துக்கு சிறந்த ரெஸ்பான்ஸ் கிடைத்தது.எனவே ரஜினியும், அவரது ரசிகர்களும் உற்சாகமாக இருக்கிறார்கள்.

முக்கியமாக ரஜினிகாந்த்துக்கு கடைசி சில வருடங்களாக எந்தப் படமும் சரியாக போகவில்லை. அதுமட்டுமின்றி அவரது ரசிகர்களும் தங்கள் தலைவரை முழு மாஸ் பேக்கேஜோடு பார்க்க முடியவில்லையே என ஏங்கிக்கொண்டிருந்தனர். அந்த ஏக்கத்தை ஜெயிலர் படம் தீர்த்து வைத்திருக்கிறது. பல இடங்களில் மாஸ் ரஜினியையும், சில இடங்களில் க்ளாஸ் ரஜினியையும் ஜெயிலரில் பார்க்க முடிந்ததாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறினர்.

அதேபோல் பீஸ்ட் படத்தின் மூலம் கடுமையாக ரோஸ்ட் செய்யப்பட்ட நெல்சன் திலீப்குமாருக்கும் இந்தப் படம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்பட்டது. எனவே இந்தப் படத்தின் மூலம் வெற்றி பெற்று தன்னை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் நெல்சனும் இருந்தார். படம் தற்போது ஹிட்டாகிவிட்டதால் அவர் தரமான கம்பேக்கை கொடுத்திருப்பதாகவும் திரைத்துறையில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஜெயிலர் படம் குறித்தும் பீஸ்ட் படம் குறித்தும் விஜய் தன்னிடம் பேசிய விஷயம் குறித்து நெல்சன் திலீப்குமார் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், ”பீஸ்ட் படத்துக்கு ரொம்பவே நெகட்டிவ் விமர்சனம் ரொம்பவே வந்தது. சமூக வலைதளங்களிலும் நிறையவே பேசினார்கள். அதை எல்லாம் பார்த்த விஜய் எனக்கு ஃபோன் செய்து அது அப்படித்தான் இருக்கும். சரி ஆகிவிடும். நீ வேணும்னா பாரு ஜெயிலர் படம் கண்டிப்பாக அடிக்கும்” என ஆறுதல் கூறினார் என்றார்.

இந்தப் பேட்டியை பார்த்த பலரும் அடுத்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தில் விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் மோதிக்கொள்கிறார்கள். ஆனால் விஜய்யோ படம் வெளியாவதற்கு முன்னதாகவே இந்தப் படம் ஹிட்டாக வேண்டும்; ஹிட் ஆகும் என சொல்லியிருக்கிறார். அப்படி இருக்க ரசிகர்கள் ஏன் தேவையில்லாமல் சண்டை போட்டுக்கொள்ள வேண்டும் என கேள்வி எழுப்புகின்றனர். மேலும் விஜய் ரொம்பவே நல்ல மனிதனாக இருக்கிறார் என்றும் கமெண்ட்ஸ்ட் செய்துவருகின்றனர்.

சற்று முன்