நடிகர் ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்து, டப்பிங் பணிகளில் ஈடுபட்டார். இந்த படத்தை இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கி உள்ளார். லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் அமிதாப் பச்சன் கேமியோ ரோலில் நடித்துள்ளார். ராணா டகுபதி வில்லனாக நடித்துள்ளார்.
வேட்டையன் படத்தில் பகத் பாசில், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வருகிற அக்டோபர் 10ம் தேதி வேட்டையன் படம் ரிலீஸாகிறது. இந்த படத்தை முடித்த பிறகு, இப்போது ரஜினிகாந்த் கூலி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் அவரது கேரக்டர்கள் குறித்து படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார். ரஜினி தேவா என்ற கேரக்டரில் கூலி படத்தில் நடிக்கிறார். சத்யராஜ், நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாகர் என இந்த படத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி சார்ந்த நடிகர்கள் நடிக்கின்றனர்.
மேலும் இந்த படத்தில் நடிக்க நடிகர் ஷாருக்கானிடம் முதலில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அவர் நோ சொன்னதால் அடுத்து ரன்பீர் சிங்கிடம் பேசப்பட்டது. அவரும் மறுத்த நிலையில், இப்போது அமீர்கான் கூலி படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பது உறுதியாகி விட்டது. அவரது கேரக்டர் குறித்தும் லோகேஷ் கனகராஜ் போஸ்டர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கூலி படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். ரஜினிகாந்த் இதுவரை 170 படங்களில் நடித்த நிலையில், இதுதான் அவர் முதன்முறையாக ஜெயிலர் 2ம் பாகத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் படத்துக்கு கிடைத்த பெரிய வரவேற்பால், இந்த 2ம் பாகம் உருவாகிறது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கூறுகையில், ஜெயிலர் 2 படத்துக்கான ஸ்கிரிப் ரைட்டிங் பணிகளை முடித்து விட்டேன். ஜெயிலர் 2 படம் குறித்த அறிவிப்பை இன்னும் ஒரு மாதத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக வெளியிடுவார்கள் என்று கூறினார். அதனால் ஜெயிலர் 2 படப்பிடிப்பு, கூலி படப்பிடிப்பை ரஜினி முடித்த பிறகு உடனே துவங்கி விடும் என்பது உறுதியாகி விட்டதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.





