தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் திரைப்படம் “லியோ”. விஜய்யையும் தாண்டி லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்குகிறார் என்பதுதான் இத்திரைப்படம் மிகப்பெரிய பேசுப்பொருளாக இருக்கிறது.

வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி “லியோ” திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் இத்திரைப்படத்தை குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஏங்கிக்கிடக்கின்றனர். இத்திரைப்படத்தில் சஞ்சய் தத் ஏற்று நடித்த கதாபாத்திரமான ஆண்டனி தாஸ் கதாபாத்திரத்தின் அட்டகாசமான கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளிவந்தது.
அதே போல் அர்ஜூன் ஏற்று நடித்த ஹரோல்ட் தாஸ் கதாபாத்திரத்தின் ரத்தம் தெறிக்கும் கிளிம்ப்ஸ் வீடியோ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இரண்டு கிளிம்ப்ஸ்களுமே ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

“லியோ” திரைப்படமும் LCUக்குள் வருமா? வராதா? என்ற கேள்வி ரசிகர்கள் பலரையும் தூங்கவிடாமல் செய்து வருகிறது. ஒரு பக்கம் “லியோ” திரைப்படம் LCUதான் என்று தகவல் வந்தாலும் படம் வெளியாகும்போதுதான் அதனை உறுதிபடுத்த முடியும்.
இந்த நிலையில் தற்போது “லியோ” திரைப்படம் குறித்த ஒரு மாஸ் ஆன தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “லியோ” திரைப்படம் LCU என்று 90 சதவிகிதம் உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் கமல்ஹாசன் 15 நிமிடங்கள் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார் எனவும் கூறப்படுகிறது. ஆதலால் நிச்சயம் “லியோ” திரைப்படம் LCU-ல்தான் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“லியோ” திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள நிலையில் அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உட்பட பலரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





