ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “ஜெயிலர்”. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சிவராஜ்குமார், மோகன்லால் விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, சரவணன் உட்பட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

“ஜெயிலர்” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நெல்சன் இதற்கு முன் இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் ரசிகர்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை. அதே போல் ரஜினிகாந்த் இதற்கு முன்பு நடித்த “அண்ணாத்த” திரைப்படமும் சரியாக ஓடவில்லை. ஆதலால் “ஜெயிலர்” திரைப்படத்தை நிச்சயம் வெற்றித்திரைப்படமாக உருவாக்கிவிட வேண்டும் என்ற நிலையில் இருவருமே இருக்கின்றனர்.
இந்த நிலையில் “ஜெயிலர்” திரைப்படத்தின் படக்குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளனர். அந்த வீடியோவில் அனிருத் தனது நண்பருடன் கேம் விளையாடிக்கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் இயக்குனர் நெல்சன் அனிருத்தை மொபைலில் தொடபுகொள்ள அதனை அனிருத் கட் செய்துவிடுகிறார். ஏன்? என்று தனது நண்பர் கேட்கும்போது, அனிருத், “நெல்சன்தான் கால் பண்றது, எதாவது புரொமோ ரெடி பண்ண சொல்லுவான். நாளைக்கு பாத்துக்குவோம்” என கூறுகிறார். இவ்வாறு நெல்சனின் பாணியில் ஒரு கலகலப்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது “ஜெயிலர்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரொமோ குறித்த அறிவிப்பை இந்த வீடியோவின் மூலம் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். “ஜெயிலர்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரொமோ இன்று மாலை 6 மணிக்கு வெளிவரவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் குஷியில் உள்ளனர்.





