- Advertisement -
Homeபொழுதுபோக்குசன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறனிடம் நேரடியாக அந்த விஷயம் குறித்து டீல் பேசிய இயக்குனர்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறனிடம் நேரடியாக அந்த விஷயம் குறித்து டீல் பேசிய இயக்குனர் நெல்சன் – அரண்டு போன தமிழ் சினிமா இன்ட்ஸ்டரி!

- Advertisement -

சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இருந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறன், சன் குழுமங்களின் தலைவராக இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் மறைந்த திமுக தலைவர்களில் ஒருவராக முரசொலி மாறனின் மூத்த மகன். இவரது தம்பிதான் தயாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை பொருத்த வரை படத் தயாரிப்பு, நிர்வாகத்தை தலைமை பொறுப்பாளர்களான கண்ணன் மற்றும் செம்பியன் ஆகியோர்தான் கவனித்து வருகின்றனர். ரஜினிகாந்த், ஷங்கர் போன்றவர்களே இவர்களிடம்தான் அதிகமாக படத் தயாரிப்பு குறித்து பேசுவது வழக்கம். ஏனெனில் கலாநிதி மாறன், அவ்வளவு எளிதாக நெருங்க முடியாத உயரத்தில், பிஸியாக இருப்பவர்.

- Advertisement -

இந்நிலையில், நடிகர் கவின் நடிக்கும் பிளடி பெக்கர் என்ற படத்தை இயக்குனர் நெல்சன் தயாரித்துள்ளார். நடிகர் கவின் விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர். அதே போல் நெல்சனும், விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணிசெய்தவர். அந்த நட்பு ரீதியில் விஜய் டிவியில் பிளடி பெக்கர் படத்தை சாட்டிலைட், டிஜிட்டர் உரிமம் பெற விலை பேசியிருக்கிறார் நெல்சன்.

ஆனால் அவர்கள் ரூ. 1 கோடிக்கு மட்டுமே விலை பேசியுள்ளனர். இதனால் நெல்சன் பலத்த ஏமாற்றமடைந்தார். மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கும் பிளடி பெக்கர் படத்துக்கு இந்த விலை மிகவும் குறைவு என்று நெல்சன் மிகவும் அதிருப்தியடைந்தார். படத்துக்கு டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமம் தர நல்ல விலை கிடைக்க என்ன வழி என யோசித்துள்ளார்.

- Advertisement -

இயக்குனர் நெல்சன் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் 2 படத்தை உருவாக்க தயாராகி வருகிறார். ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்த வகையில், நெல்சனுக்கு கலாநிதி மாறன் சொகுசு கார் ஒன்றை பரிசளித்தார். மேலும், இப்போது ஜெயிலர் 2 படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக இயக்க உள்ளார்.

இந்த சூழலில், கலாநிதி மாறனை நேரில் அடிக்கடி சந்திக்க வாய்ப்பு அமைந்த நிலையில், அவரிடம் நேரடியாக பேசிய இயக்குனர் நெல்சன், பிளடி பெக்கர் படத்தை நீங்களே நல்ல விலை கொடுத்து டிஜிட்டல், சாட்டிலைட் உரிமம் பெற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து ரூ. 3 கோடி விலை கொடுத்துள்ளார் கலாநிதி மாறன். கலாநிதி மாறனே நேரடியாக டீல் பேசி முடித்த படம் பிளடி பெக்கர் என்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

சற்று முன்