- Advertisement -
Homeபொழுதுபோக்குவாழ்க்கையில் கஷ்டம் வந்தா அப்படி செய்யாதீங்க, இப்படி யோசிங்க… - ரசிகர்களுக்கு சூப்பரான அட்வைஸ் தந்த...

வாழ்க்கையில் கஷ்டம் வந்தா அப்படி செய்யாதீங்க, இப்படி யோசிங்க… – ரசிகர்களுக்கு சூப்பரான அட்வைஸ் தந்த நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா!

- Advertisement -

வாலி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா. அஜீத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த இந்த படம் மாஸ் ஹிட் ஆனது. இதில் ஒரு அஜீத்குமார் நாயகனாகவும், மற்றொரு அஜீத்குமார் வில்லனாகவும் நடித்திருப்பர். சிம்ரன் நாயகியாக நடித்த இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஜோதிகாவும் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

வாலி படத்தை தொடர்ந்து எஸ்ஜே சூர்யா இயக்கிய படம் குஷி. விஜய் ஜோதிகா நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக விஜய் மற்றும் ஜோதிகாவுக்கு அவர்களது சினிமா பயணத்தில் மிக முக்கியமான ஒரு படமாகவும் அமைந்தது. இந்த படத்தில் விஜய் டான்ஸ் பெரிய அளவில் ரசிகர்களை அவருக்கு உருவாக்கித் தந்தது.

- Advertisement -

அதன்பிறகு அன்பே ஆருயிரே கள்வனின் காதலி நியூ வியாபாரி திருமகன் உள்ளிட்ட படங்களில் எஸ்ஜே சூர்யா நடித்து நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார். பிறகு 10 ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி இருந்த அவர் மீண்டும் இறைவி படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து மாநாடு மார்க் ஆண்டனி ராயன் கேம் சேஞ்சர் இந்தியன் 2 வீர தீர சூரன் என பிரதான வில்லன் நடிகராக மாறியிருக்கிறார். நடிப்பு அரக்கன் என்ற அடைமொழியுடன் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு இந்தி கன்னடம் மலையாளம் என பிற மொழிகளிலும் ஒரு சிறந்த நடிகராக பல படங்களில் தன் நடிப்பை வெளிப்படுத்தி எஸ்ஜே சூர்யா ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா கூறியதாவது, 5 வருடங்களுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு கஷ்டமான விஷயம் நடந்திருக்கும். அப்போ நீங்க ரொம்பவும் அழுதிருப்பீங்க. அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் பார்த்தீங்கன்னா அந்த சம்பவம்தான் நீங்க இன்னைக்கு நல்லா இருக்க காரணமா இருக்கும்.

அதற்கான ஒரு சம்பவமாகத்தான் அது அப்போது நடந்திருக்கும். ஆனால் இதனால்தான் நாம நல்லா இருக்க போறோம் என்று தெரியாமல் நீங்க அப்போ அழுதிருப்பீங்க. அப்போ வாழ்க்கையில் நமக்கு கஷ்டம் வரும்போது அழுவதை நிப்பாட்டிக்கொள்வது கொஞ்சம் நல்லது என்று நடிகர் எஸ்ஜே சூர்யா தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்