- Advertisement -
Homeபொழுதுபோக்குவிருந்து சாப்பிட்ட மதி மயக்கத்துல ஏதோ பேசிட்டாருப்பா, கண்டுக்காதீங்க - ரஜினிக்கு முட்டுக்கொடுக்கும் ரசிகர்கள் -...

விருந்து சாப்பிட்ட மதி மயக்கத்துல ஏதோ பேசிட்டாருப்பா, கண்டுக்காதீங்க – ரஜினிக்கு முட்டுக்கொடுக்கும் ரசிகர்கள் – விளாசித் தள்ளும் நெட்டிசன்கள்

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இந்தியாவில் எங்கு சென்றாலும் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அமெரிக்கா, லண்டன், ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா என வெளிநாடுகளிலும் ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். அதனால் தமிழ்நாட்டின் மிக முக்கிய அடையாளமாக மாறிவிட்டவர் ரஜினிகாந்த் என்றால் அது மிகையல்ல.

இப்போது ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு அவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்தில் நடிக்க உள்ளார். ஏப்ரல் மாதம் அதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இந்த படத்துக்கு பிறகு ஜெயிலர் 2 படத்தில், நெல்சன் இயக்கத்திலும், அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்திலும் ரஜினி நடிக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி நண்பர்கள், உறவினர்கள், சக நடிகர்கள் வீடுகளில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் கலந்துக்கொள்கிறார். மற்ற நடிகர்களை போல இல்லாமல், ரஜினி, நிச்சயமாக இதுபோன்ற மற்றவர் இல்ல விசேஷங்களில் பங்கேற்க காரணம், அவர்களது நட்பை அவர் மதிப்பதுதான். சமீபத்தில் நடிகர் விஜயகுமார் பேத்தி தியா திருமண விழாவில் ரஜினி பங்கேற்றார்.

இப்போது மும்பையில் உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி இல்ல திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா ஆகியோருடன் கலந்துக் கொண்டார். அப்போது லக்கேஜ் தூக்கி வந்த தங்களது வீட்டு வேலைக்கார பெண்ணை, போட்டோவுக்கு நிற்க வேண்டாம் என ரஜினி விரட்டி வீடியோ 2 நாட்களுக்கு முன்பு வைரலானது.

- Advertisement -

இந்நிலையில் சில தினங்கள் மும்பையில், முகேஷ் அம்பானியின் வீட்டில் விருந்தினர்களாக தங்கி அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மணமக்களை வாழ்த்திய ரஜினி குடும்பத்தினர், அங்கு செம ஜாலியாக இருந்துள்ளனர். அந்த புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது வலைதள பக்கங்களில் வெளியிட்டு சந்தோஷத்தை பகிர்ந்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து மும்பையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினியிடம் மைக்கை நீட்டிய செய்தியாளர்களிடம், மும்பானி வீட்டு திருமணத்தால், இந்திய நாட்டுக்கு பெருமை, என கூறிவிட்டார் ரஜினிகாந்த். மும்பானி வீட்டு திருமணத்துக்கும், இந்தியாவின் பெருமைக்கும் என்ன சம்பந்தம், மும்பையில் அம்பானி தந்த தடபுடல் விருந்தில், சாப்பிட்ட மதி மயக்கத்தில் பேசி விட்டாரா என நெட்டிசன் விளாசித் தள்ளிய நிலையில், அட தலைவர் ஏதோ ஆர்வத்துல பேசிவிட்டார். அதை ஏம்பா பெருசு பண்றீங்க என, ரஜினி ரசிகர்கள் நெட்டிசன்களை சமாதானப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்