- Advertisement -
Homeபொழுதுபோக்குதொப்பைக்கே தனி லக்கேஜ்.. அஜித்தை கலாய்த்த பிரபலம்.. பதிலடி கொடுத்த நெட்டிசன்ஸ்

தொப்பைக்கே தனி லக்கேஜ்.. அஜித்தை கலாய்த்த பிரபலம்.. பதிலடி கொடுத்த நெட்டிசன்ஸ்

- Advertisement -

சினிமாவில் யாரின் துணையுமின்றி வந்தவர் அஜித். ஆரம்பத்தில் பல தடவை விழுந்து மீண்டும் எழுந்தவர். இதன் காரணமாகவே அவருக்கு ரசிகர்கள் எக்கச்சக்க பேர் இருக்கின்றனர். அவர் கடைசியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்திருந்தார். படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது.

இதனையடுத்து தனது 62ஆவது படத்தில் கமிட்டானார் அஜித். அதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் வெளியேற மகிழ் திருமேனி உள்ளே வந்தார். மகிழ் திருமேனி அஜித்தை வைத்து இயக்கப்போகும் படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி அதற்கு பிறகு அதுகுறித்த எந்தவிதமான அப்டேட்டும் இல்லாமல் இருக்கிறது. இதன் காரணமாக வலிமை அப்டேட்டுக்கு காத்திருந்தது போல் ஏகே ரசிகர்கள் விடாமுயற்சி அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இதற்கிடையே பைக் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட அஜித் குமார் முதலில் பைக்கிலேயே இந்தியா முழுவதும் சுற்றி வந்தார். அதனையடுத்து உலக சுற்றுப்பயணத்துக்கு திட்டமிட்டிருக்கிறார். அதன்படி முதற்கட்ட உலக சுற்றுப்பயணத்தை நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் முடித்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார்.

இந்தச் சூழலில் திடீரென அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற அவர் அங்கு கார் ஓட்டிய வீடியோவும், எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகின. பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று சென்னை திரும்பினார் அஜித். ரெட் கலர் டி ஷர்ட்டில் அவர் விமான நிலையத்தில் வந்தபோது ரசிகர்களுடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.

- Advertisement -

இந்நிலையில் பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் அஜித்தை உருவ கேலி செய்து ட்வீட்டியிருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில், “அஜித்திற்கு நெருக்கமான ஒருவர், ‘சார் இப்ப தினமும் வொர்க்கவுட் பண்ணி ஸ்லிம் ஆயிட்டாரு தெரியுமா?’ன்னாரு. ஏர்போர்ட்ல அஜித் வர்ற காட்சிய பார்த்தா தொப்பைக்கே தனி லக்கேஜ் போட்ருப்பாரு போல.. யோவ்…ஸோர்ஸ், என்னய்யா இப்படி பண்ணிட்டே” என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனைப் பார்த்த அஜித் ரசிகர்கள் அந்தணனை கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். அவர்கள் தவிர்த்து அஜித் ரசிகர்களாக இல்லாதவர்களும், இதெல்லாம் ஒரு காமெடியா. இப்படியா ஒருவரை உருவ கேலி செய்வது. விமர்சனம் செய்கிறவர் படத்தை பற்றி மட்டும் பேசுங்கள் என காட்டமாக பதிலடி கொடுத்துவருகின்றனர். இதற்கிடையே அஜித் சென்னை திரும்பி வந்துவிட்டதால் விடாமுயற்சி ஷூட்டிங் விரைவில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்