- Advertisement -
Homeபொழுதுபோக்கு1990 முதல் 2000ம் ஆண்டு வரை - 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் வசூலில் முதலிடம்...

1990 முதல் 2000ம் ஆண்டு வரை – 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் வசூலில் முதலிடம் பிடித்த நட்சத்திர ஹீரோக்கள்…. எந்தெந்த படங்கள் தெரியுமா?

- Advertisement -

இன்றைய தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துவிட்டால் அது மிகப் பெரிய வெற்றிப் படம் என்று கொண்டாடப்படுகிறது. பிளாக்பஸ்டர் மூவி என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஒரு படம் 100 கோடி ரூபாய் வசூலித்தால் அது மிகப் பெரிய வெற்றி தான்.

ஆனால் அதே நேரத்தில் 300 கோடி ரூபாய் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஒரு படம் 100 கோடி ரூபாய் வசூலை அடைவது என்பது நிச்சயமாக அது வெற்றியாக கருதப்பட மாட்டாது. ஆனால் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பட்ஜெட் மிகக்குறைவாக இருந்த போதிலும் படத்தின் லாபம் என்பது சில கோடிகள் இருந்தாலே அது பெரிய வெற்றி படமாக தான் ரசிகர்களால் பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஏனென்றால் அந்த படங்கள் வெளியான காலகட்டத்தில் பிரமோஷன் என்ற பெயரில் படங்களை அதீத அளவில் விளம்பரப்படுத்தி மக்கள் மத்தியில் திணிக்கும் அளவுக்கு கொண்டு சென்றது கிடையாது. படம் பார்த்த ரசிகர்கள் கூறும் விமர்சனம் கேட்டு தான் அந்த படத்தை பார்க்க திரளாக ரசிகர்கள் தியேட்டருக்கு சென்றார்கள். அதன் மூலமாகத்தான் பெரிய வசூலை அந்த படங்கள் அடைந்தன.

அந்த வகையில் கடந்த 1990ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டிலும் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் குறித்து இப்போது தெரிந்துக்கொள்ளலாம். கடந்த 1990ம் ஆண்டில் வெளியான ரஜினி நடித்த பணக்காரன் படம் 6.85 கோடி ரூபாய் வசூலித்தது. 1991ம் ஆண்டில் ரஜினி நடித்த தளபதி படம் 12.5 கோடி ரூபாய் எட்டியது. 1992ம் ஆண்டில் ரஜினி நடித்த அண்ணாமலை படம் 15.6 கோடி ரூபாய் வசூலை எட்டியது.

- Advertisement -

கடந்த 1993ம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படம் 12.5 கோடி ரூபாய், 1994ம் ஆண்டில் வெளியான காதலன் படம் 17.5 கோடி ரூபாய் வசூலையும் அள்ளியது. 1995ம் ஆண்டில் ரஜினி நடித்த பாட்ஷா படம் 36.3 கோடி ரூபாய் வசூலித்தது. 1996ம் ஆண்டில் கமல் நடித்த இந்தியன் படம் 58.1 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. 1997ம் ஆண்டில் ரஜினி நடித்த அருணாசலம் படம் 31.5 கோடி வசூலை அள்ளியது.

1998ம் ஆண்டில் ஜீன்ஸ் படம் 34.8 கோடி ரூபாய், 1999ம் ஆண்டில் படையப்பா படம் 60.4 கோடி ரூபாய், 2000ம் ஆண்டில் தெனாலி படம் 30.5 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. இந்த படங்கள் எல்லாமே அந்தந்த ஆண்டில் வெளியாகி அதிக வசூலில் முதலிடம் பிடித்த படங்களாகும். இதில் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் இயக்கிய படங்கள் தான் முதல் இடத்தை பிடித்திருக்கின்றன. இதன் மூலம் 1990 முதல் 2000 வரை 10 ஆண்டுகளில் இவர்கள் 3 பேர் மட்டுமே தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்து பெரிய வசூலை அள்ளியிருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்