- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடேங்கப்பா தமிழ் சினிமாவில் இது ஒரு பொன்னான ஆண்டுதான் - இந்த பொக்கிஷ இயக்குனர்கள் அந்த...

அடேங்கப்பா தமிழ் சினிமாவில் இது ஒரு பொன்னான ஆண்டுதான் – இந்த பொக்கிஷ இயக்குனர்கள் அந்த ஆண்டில்தான் காலடி வைத்தார்களா?

- Advertisement -

கடந்த 1990ம் ஆண்டு தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஆண்டாக மாறியிருக்கிறது. இந்த ஆண்டில் தான் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் அறிமுகமானார்கள். ஆர்கே செல்வமணி விக்ரமன் வசந்த் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் வி சேகர் ஆகிய 5 இயக்குனர்களும் இந்த 1990ல் தமிழ் சினிமாவுக்குள் வந்தார்கள். புலன் விசாரணை படம் மூலம் ஆர்கே செல்வமணியும் புது வசந்தம் படம் மூலம் இயக்குனர் விக்ரமனும் கேளடி கண்மணி படம் மூலம் வசந்த் புரியாத புதிர் படம் மூலம் கேஎஸ் ரவிக்குமார் நீங்களும் ஹீரோதான் படம் மூலம் வி சேகர் ஆகியோர் தமிழ் சினிமாவில் இயக்குனர்களாக அறிமுகமானவர்கள். அடுத்த 20 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த தவிர்க்க முடியாத இயக்குனர்களாக அவர்கள் மாறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்