- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அல்லு அர்ஜூன், இயக்குனர் அட்லி காம்போவில் உருவாகும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட...

நடிகர் அல்லு அர்ஜூன், இயக்குனர் அட்லி காம்போவில் உருவாகும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்!

- Advertisement -

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணி செய்தவர் அட்லி. ஆர்யா ஜெய் நயன்தாரா நஸ்ரியா சந்தானம் சத்யராஜ் சத்யன் உள்ளிட்டோர் நடித்த ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே பெரிய வரவேற்பை அட்லிக்கு பெற்றுத் தந்தது.

பிறகு விஜய் நடித்த தெறி மெர்சல் பிகில் ஆகிய படங்களை அட்லி இயக்கினார். இந்த 3 படங்களுமே மாஸ் ஹிட் படங்களாக அமைந்து அட்லி இமேஜ் வேற லெவலுக்கு சென்றது. இந்த படங்களின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் தனது ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பை அட்லிக்கு தந்தார்.

- Advertisement -

இந்த படம் 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. ஷாருக்கான் நடித்த பதான் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கிய ஜவான் படமும் வசூலில் சக்கைப் போடு போட்டதால், அடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்கப் போவது யார், எந்த நிறுவனம் படத்தை தயாரிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

இந்நிலையில் இன்று அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது. ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிக்கும் 22வது படம் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகும் 6வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதை அந்த வீடியோவில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

- Advertisement -

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி வெளியான புஷ்பா 2 படம் உலகம் முழுவதும் 1800 கோடி ரூபாய் வசூலித்தது. அட்லி இயக்கிய அவரது 5வது படம் ஜவான் ரூ. 1150 கோடி வசூலித்த நிலையில், அல்லு அர்ஜூனின் 22வது படம் என்பதை ஏஏ 22, இயக்குனர் அட்லி இயக்கும் 6வது படம் என்பதை ஏ6 என்ற குறியீடுகளுடன் இந்த வீடியோவில் அடுத்த படம் குறித்த அறிவிப்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் இந்த படம் அறிவியல் புனைவு கதையாக உருவாக உள்ளதால், அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ்சில் உள்ள லோலா விஎப்எக்ஸ் அலுவலகத்தில் அட்லி, அல்லு அர்ஜூன் முதல்கட்ட படப்பிடிப்பு காட்சிகளை துவக்கியிருப்பதும் வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அல்லு அர்ஜூன் அட்லி சன்பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சந்திப்பும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

சற்று முன்