- Advertisement -
Homeபொழுதுபோக்குஇசை வெளியீட்டுக்கு மட்டுமில்லை.. ட்ரெய்லர் வெளியீட்டுகும் ஆப்பு?.. என்னடா இது லியோவுக்கு வந்த சோதனை

இசை வெளியீட்டுக்கு மட்டுமில்லை.. ட்ரெய்லர் வெளியீட்டுகும் ஆப்பு?.. என்னடா இது லியோவுக்கு வந்த சோதனை

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகளும் முடிவடைந்து படம் சென்சாருக்கு சென்றிருக்கிறது. விரைவில் சென்சார் சர்ட்டிஃபிக்கேட் கிடைத்துவிடும்.

படமானது மொத்தம் இரண்டு மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடும் என்று கூறப்படுகிறது. லோகேஷின் படங்கள் என்றாலே அவ்வளவு நேரம் ஓடும் என்பதால் அதில் ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. எவ்வளவு நேரமாக இருந்தாலும் தனது திரைக்கதையின் மூலம் ஒரு மேஜிக்கை அவர் செய்துவிடுவார் என்று நம்புகின்றனர் ரசிகர்கள். அநேகமாக இந்தப் படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் வரலாம் என்றும் கருதப்படுகிறது.

- Advertisement -

சூழல் இப்படி இருக்க படமான அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. வெளிநாடுகளில் பட டிக்கெட்டுக்கான ப்ரீ புக்கிங் தொடங்கிவிட்டது. பல நாடுகளில் ஜெயிலர் சாதனையை அசால்ட்டாக லியோ உடைத்துவருவதாக கூறுகிறார்கள். ப்ரீ புக்கிங்கிற்கே இப்படி என்றால் படம் ரிலீஸாகி வசூல் எவ்வளவு செய்யும் என்ற ஆவலுடன் இருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.

படத்திலிருந்து வரிசையாக போஸ்டர்கள் வெளியான சூழலில் இசை வெளியீட்டு விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது திடீரென ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும் படத்திலிருந்து செகண்ட் சிங்கிள் வெளியானது. ஆனால் அந்தப் பாடல் முதல் சிங்கிள் போல் இல்லாமல் கொஞ்சம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

- Advertisement -

இந்த சூழலில் லியோ படத்தின் ட்ர்யெலர் நாளை வெளியாகவிருக்கிறது. சன் டிவி யூட்யூப் சேனலில் வெளியாகும் லியோ ட்ரெய்லரை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். இதற்கிடையே ட்ரெய்லரை சென்னையின் முக்கிய இடங்களில் திரை அமைத்து திரையிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருந்தது.

இந்நிலையில் எப்போதுமே பெரிய ஹீரோ படத்தின் ட்ரெய்லர் வந்தால் சென்னை ரோகிணி தியேட்டரின் வெளியில் திரை அமைத்து அதில் ட்ரெய்லர் திரையிடப்படுவது அதை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவது வழக்கம். லியோவுக்கும் அதற்கான ஏற்பாடுகளை படக்குழு செய்து கோயம்பேடு காவல்துறையிடம் அனுமதி கேட்டதாகவும் அதற்கு காவல் துறை தரப்போ நீங்கள் காவல் ஆணையரை சந்தித்து அனுமதி பெற்றுக்கொள்ளுங்கள் என்று நழுவிவிட்டதாம். ஏற்கனவே இதுபோன்ற ஒரு நிகழ்வில் உயிரிழப்பு ஏற்பட்டது. எனவே லியோ ட்ரெய்லரை திரை கட்டி திரையிட காவல் ஆணையர் அனுமதி கொடுப்பாரா என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்