- Advertisement -
Homeபொழுதுபோக்குவீரதீர சூரன் படத்தில் இப்படி ஒரு தரமான சம்பவம் செஞ்சிருக்காங்க, அப்போ தியேட்டரே கதி கலங்க...

வீரதீர சூரன் படத்தில் இப்படி ஒரு தரமான சம்பவம் செஞ்சிருக்காங்க, அப்போ தியேட்டரே கதி கலங்க போகுது – ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்குது!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு அடுத்தப்படியாக நடிப்பில் தன்னிகரற்ற ஒரு கலைஞராக கூறப்படுபவர் நடிகர் சியான் விக்ரம். சேது படத்தில் துவங்கி, கடைசியாக அவரது நடிப்பில் வெளியான தங்கலான் படம் வரை, விக்ரம் நடிப்பு எப்போதுமே வேற லெவலில்தான் இருந்த வருகிறது.

காசி பிதாமகன் ஐ அந்நியன் இராவணன் என ஒவ்வொரு படத்திலும் நடிப்புக்காக அதிகளவில் மெனக்கெட்டு உடலை வருத்திக் கொண்டு நடிக்கும் நடிகராக சியான் விக்ரம் இருந்து வருகிறார். நடிகர் கமல்ஹாசன்தான் இப்படி தன்னை வருத்திக்கொண்டு அந்த கேரக்டருக்காக உயிரை கொடுத்த நடிப்பார் என்றால், நடிகர் விக்ரமும் அதே போல் தன் உழைப்பை நடிப்புக்காக தந்து வருகிறார்.

- Advertisement -

பண்ணையாரும் பத்மினியும் சித்தா ஆகிய படங்களை இயக்கியவர் அருண்குமார். இந்த 2 படங்களுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஆழமாக பாதித்த படங்களாக தான் இருந்திருக்கின்றன. வயது முதிர்ந்த தம்பதிக்குள் இருக்கும் அன்னியோனத்தையும் பாசத்தையும் பரிவையும் காதலையும் அன்பையும் சொன்ன படமாக பண்ணையாரும் பத்மினியும் படம் இருந்தது.

அதேபோல் சிறுமியர் பாலியல் தொல்லையை சொல்லும் மிக அற்புதமான ஒரு படமாக சித்தா இருந்தது. இந்த படத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பு பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. இந்த 2 படங்களால் பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனம் பெற்ற அருண்குமார் இயக்கிய படம்தான் வீர தீர சூரன் படம். வருகிற 27ம் தேதி இந்த படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.

- Advertisement -

நடிகர் விக்ரம் இயக்குனர் அருண்குமார் நடிகை துஷாரா விஜயன் உள்ளிட்ட வீரதீர சூரன் படத்தில் நடித்தவர்கள் மற்றும் அந்த படப்பிடிப்பு குழுவை சேர்ந்த அனைவருமே இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர். ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பும் ஆர்வமும் மிக அதிகமாக உள்ளது.

வீர தீர சூரன் படத்துக்கு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்த நிலையில் பின்னணி இசையில் அதிரடியாக கலக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் விக்ரம் நடித்த தூள் படத்தில் பறவை முனியம்மா பாடிய சிங்கம் போல சிங்கம் போல நடந்து வரான் செல்லப் பேராண்டி பாடலும் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த பாடல் காட்சியில் தியேட்டரே அதிரப் போகிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

சற்று முன்