ரொம்ப யூஷூவலான ஸ்டோரி தாங்க, ஜாலியா வாங்க ஜாலியா போங்க என்று படத்தின் இயக்குனர் நடிகர் தனுஷ் திரையில் தோன்றி பேசும் காட்சியுடன் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் டிரெய்லரே ஆரம்பிக்கிறது. தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக நடித்திருக்கிறார். நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தனுஷின் பெற்றோர் கஸ்தூரி ராஜா, விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
ஏற்கனவே நடிகராக பாடகராக தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் ஜெயித்து காட்டியவர் நடிகர் தனுஷ். இப்போது இயக்குனராக மாறி அசத்திக்கொண்டு இருக்கிறார். ராஜ்கிரண் ரேவதி நடித்த ப பாண்டி படம் வெற்றிக்கு பிறகு தனுஷ் இயக்கிய ராயன் படம் கடந்தாண்டில் வெளியாக மாபெரும் வெற்றியை பெற்றது. இது தனுஷின் 50வது படமாகவும் இருந்தது.
கடந்த 2024ம் ஆண்டில் தமிழில் வெளியான படங்களில் 100 கோடி ரூபாய் வசூலித்த 8 படங்களில் ராயன் படமும் ஒன்றாக இருந்தது. ராயன் தந்த அபார வெற்றிக்கு பிறகு தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை என்ற 2 படங்களை டைரக்ட் செய்திருக்கிறார். இதில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் வருகிற 21ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். தனுஷின் சொந்த அக்கா மகன் பவிஷ் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் நரேன் அனிகா சுரேந்திரன் பிரியா பிரகாஷ் வாரியர் மேத்யூ தாமஸ் சித்தார்த் ஷங்கர் ரம்யா ரங்கநாதன் வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
இது ஒரு பையன் இது ஒரு பொண்ணு இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்க. அப்போ இந்த பையன் யாரு… என நாயகன் கதை சொல்வது போலவும், அதே டயலாக்கை நாயகி ஒருமுறை சொல்வது போலவும் காட்சிகள் டிரெய்லரில் வருகின்றன. டீன் ஏஜ் காதலர்களின் இன்றைய வாழ்க்கை சூழலை காதலை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருப்பதை டிரெய்லர் காட்சிகள் உறுதிபடுத்துகின்றன.
ஏற்கனவே இந்த படம் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் விடாமுயற்சி படம் ரிலீஸ் காரணமாக பிப்ரவரி 21ம் தேதிக்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. அதே போல் காதலர் தினத்தன்று வெளியாக வேண்டிய பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படமும் வருகிற 21ம் தேதி ரிலீஸாக உள்ளது. இரண்டு படங்களே காதலை மையப்படுத்திய படங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் டிரெய்லரை காண இங்கே கிளிக் செய்யவும்;https://youtu.be/M3nu9ftN1_Q?si=MxILcCxqiDpxlkQ9





