- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயக கடமையை முதல் ஆளாக வந்து நிறைவேற்றிய நடிகர் அஜீத்குமார் - வாக்குசாவடிக்கு வராமல் ஏமாற்றியவர்கள்...

ஜனநாயக கடமையை முதல் ஆளாக வந்து நிறைவேற்றிய நடிகர் அஜீத்குமார் – வாக்குசாவடிக்கு வராமல் ஏமாற்றியவர்கள் லிஸ்ட்டும் இருக்குது!

- Advertisement -

தமிழக சட்டசபை தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடந்தது. ஆங்காங்கு சிறுசிறு சலசலப்புகள் சின்ன சின்ன பிரச்னைகள் எழுந்தாலும் பெரிய அளவில் பாதிப்பின்றி இந்த தேர்தல் சுமூகமாகவே நடந்து முடிந்தது. 85 சதவீதத்துக்கும் அதிகமாக மக்கள் வாக்களித்துள்ள நிலையில் வருகிற மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் நேற்று நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் என திரையுலகம் சார்ந்தவர்கள் சென்னையில் தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். முதல் ஆளாக அஜீத்குமார் திருவான்மியூர் ஓட்டுச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். தேர்தல் நேரம் துவங்கும் முன்பே அவர் வாக்களித்ததாக கூறப்பட்டது.

- Advertisement -

தொடர்ந்து ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவுடனும் நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனுடன் வந்து வாக்களித்தனர். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குசாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். இளையராஜா அனிருத் கே பாக்யராஜ் சாந்தனு ஜெயம் ரவி சிலம்பரசன் சத்யராஜ் விஷால் விக்ரம் துருவ் விக்ரம் டி ராஜேந்தர் சிவக்குமார் சூர்யா ஜோதிகா கார்த்தி என பலரும் தங்களது ஓட்டுகளை செலுத்தினர்.

மேலும் சிவகார்த்திகேயன் பிரபு அர்ஜூன் பிரசன்னா ஜெய் வடிவேலு நடிகைகள் கீர்த்தி சுரேஷ் திரிஷா சாய்பல்லவி ஐஸ்வர்யா ராஜேஷ் அதிதி ஷங்கர் வரலட்சுமி சிம்ரன் ரம்யாபாண்டியன் இயக்குனர்கள் ஷங்கர் முருகதாஸ் அட்லி ஜீவி பிரகாஷ் பிரதீப் ரங்கநாதன் அருண்விஜய் சிபிராஜ் அதர்வா சித்தார்த் பார்த்திபன் உள்ளிட்ட பலர் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

- Advertisement -

அதே நேரத்தில் கால்ஷீட் தந்துவிட்டு ஷூட்டிங் வராதது போல சில நடிகர் நடிகைகள் வாக்களிக்க வரவில்லை. இயக்குனர் பாரதிராஜா உடல் நலமின்மையால் ஓட்டு போட வரவில்லை. ஒருவேளை தபால் ஓட்டு போட்டிருக்க வாய்ப்புள்ளது. நெல்சன் லோகேஷ் கனகராஜ் நயன்தாரா ஏஆர் ரகுமான் யுவன் சங்கர் ராஜா மீனா ரம்யா கிருஷ்ணன் கார்த்திக் ஆர்யா கவுண்டமணி செந்தில் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் ஓட்டுப் போட வரவில்லை.

ஒருவேளை இதில் முதுமயைான சில கலைஞர்கள் தபால் ஓட்டு போட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. இதில் சில நடிகர்கள் விஜய் டிரஸ் கோடான வெள்ளை சர்ட் சந்தன கலர் பேண்ட் அணிந்து வந்து தவெக ஆதரவாளர்களாக தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர். சாய்பல்லவி கோவையில் தனது ஓட்டை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் கேரளாவை சேர்ந்த கீர்த்தி சுரேஷ் சென்னையில் தனது வாக்கை செலுத்தினார்.

- Advertisement -

சற்று முன்